Sunday, July 14, 2024

மெட்ராஸ் காரக்குழம்பு

 மெட்ராஸ் காரக்குழம்பு

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்  - நாலு
பெரிய வெங்காயம்  - 2
பூண்டு -  15 பல்
புளி  - நெல்லிக்காய் அளவு
குழம்பு மிளகாய்த்தூள்  - நாலு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கடுகு ,வெந்தயம் ,சீரகம் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி அளவு
கருவேப்பிலை  - சிறிதளவு
உப்பு  - தேவையான அளவு

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து  கடுகு ,சீரகம் ,வெந்தயம் ,கருவேப்பிலை  போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கி அதனுடன் நீளமாக நறுக்கிய கத்தரிக்காயும் போட்டு நன்கு வதக்கி மஞ்சள் தூள் குழம்பு ,மிளகாய்த்தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின் அதனுடன் தக்காளி ,புளித்தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி மூன்று டம்ளர் தண்ணி தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குழம்பு கெட்டியானவுடன் இறக்கினால் சூப்பரான மெட்ராஸ் காரக்குழம்பு ரெடி.

No comments:

Post a Comment