முள்ளங்கி குழம்பு செய்வது எப்படி ...
தேவையான பொருட்கள் :
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முள்ளங்கியை தோல் நீக்கு அலசிவிட்டு, வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கி, காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கி நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் இது ஏற்ற குழம்பு ஆகும்.
No comments:
Post a Comment