பகிர்வு :
👆👆 படித்ததில் பிடித்தது
கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்.. கடவுளை நம்பாத ஒருவர் ரயிலில் ஏறுகிறார்.
பக்கத்து சீட்டில் ஒரு சிறுமி பேப்பரில் விநாயகர் படம் வரைந்து கொண்டிருக்கிறாள்.
பேசத் துவங்கினார் அவர், “என்னம்மா பண்ற படம் வரையறாப்ல இருக்கு? இதுக்கு பதிலா நாம பேசிக்கிட்டே சென்னை வரைக்கும் போனோம்ன்னு வை நல்லா பொழுது போகும்ல...”
சிறுமி கொஞ்சம் புன்னகைத்து பேப்பரை மூடி வைத்து விட்டு கை கட்டி கொண்டு கேட்டாள்.
“என்ன பேசலாம் அங்கிள்..? சொல்லுங்க...”
“என்ன வேணா பேசலாம்மா. கடவுள் அப்படீங்கறத பத்தி பேசலாம்.
அது எவ்வளவு முட்டாள்தனம்னு பேசலாம்.
முன் ஜென்மம், மறு ஜென்மம் இதெல்லாம் எவ்வளவு அபத்தம்னு பேசலாம்.
இது மாதிரி விநாயகர் படம் வரையரதுக்கு பதிலா இப்படி பகுத்தறிவா கடவுள் பத்தி பேசலாம்.
உன்ன மாதிரி யங் ஜெனரேஷனுக்கு உதவுமா இல்லியா...?”
சிறுமி கண்களில் பளபளப்பு....
"கண்டிப்பா அங்கிள் பேசலாம். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டவுட்டு...”
“கேளும்மா. எது வேணாலும் கேளு?”
“குதிரை, மாடு, மான், ஆடு இதெல்லாம் ஒரே மாதிரியா புல்லு தான் திங்குது. ஆனா குதிரை சாணி வேற மாதிரி இருக்கு, ஆட்டுக்கு புழுக்கையா வருது, மானுக்கு குண்டு குண்டா வருது, மாட்டுக்கு சாணி வேற மாதிரி வருது. ஏன் அங்கிள். எல்லாம் ஒரே மாதிரி தான சாப்பிடுது. அப்புறம் எப்படி இப்படி வித்தியாசமா வருது...”
இந்தக் கேள்வியை எதிர்பார்க்க வில்லை அவர்.
யோசித்து... “ஹூம்.. ரொம்ப சிக்கலான கேள்வியா இருக்கே. தெரியலையேம்மா.” என்று இழுத்தார்.
“ஏன் அங்கிள், கேலவம் ஒரு சாணியப் பத்தி கூட அடிப்படையா ஏன்னு தெரியலை உங்களுக்கு. உண்மையிலேயே, கடவுளையெல்லாம் பத்தி பேச தகுதி இருக்கா?” என்று சொல்லி சிறுமி மறுபடியும் குனிந்து படம் வரையத் துவங்கினாள். 👍 🌹 👌
No comments:
Post a Comment