சங்கராம்ருதம் - 231
ஒரு ஏழை பிராமண சமையல்காரன், நான்கு
பெண் குழந்தைகள், சரியான உடைகள் இல்லை. தன் மனைவியுடன் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு, (மனைவி வெளியில் நின்று கொண்டிருந்தாள்) ஸ்ரீ பெரியவாளை தரிசனம் செய்ய வந்திருந்தான்.
ஸ்ரீ பெரியவாளை நமஸ்கரித்து, 'அய்யா எனக்கு இரண்டு ஒன்பது கஜம் புடவையும், ரவிக்கையும் வேண்டும்' என்றான். இரண்டு கேட்கிறான் என்று இரண்டு புடவை, வேஷ்டி கொடுத்தார்.
ஸ்ரீ பெரியவா அந்த குழந்தைகளிடம் ஒரு புடவையைக் கொடுத்து, "இந்த புடவையை உன் அம்மாகிட்ட கொடுத்து 9 கஜம் கட்டிண்டு வரச்சொல்லு என்றார். எனக்கு (பாலு) ரொம்ப ஆச்சரியம். அந்தம்மாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. அதனால் ஸ்ரீ பெரியவாளிடம்"இவன் மனைவி வந்திருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன். அதற்கு ஸ்ரீ பெரியவா,...
"அந்தம்மாவிடம் 9 கஜம் புடவையில்லை. 9 கஜம் கட்டாமல் எப்படி என் முன் வருவது என்று மறைந்து நின்றுகொண்டிருக்கா" என்றார். "அதுவும் இல்லாமல் இந்த சின்ன குழந்தை அம்மாவிடம் பால் குடிக்கும் குழந்தை. கட்டாயம் அம்மா இல்லாமல் இந்த குழந்தை வரமுடியாது.
அம்மாவிடம் சரியான துணிகள் இல்லை என்பது இந்த குழந்தைகளைப் பார்த்தாலே தெரிகிறது என்றார்.
எவ்வளவு யோசனை செய்து பார்க்கிறார் ஸ்ரீமஹாபெரியவா.
பெரியவா சரணம் 🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
No comments:
Post a Comment