Monday, August 1, 2022

உபயோகமான வீட்டுக் குறிப்புகள்

 *உபயோகமான வீட்டுக் குறிப்புகள்!*

*தரமான எவர்சில்வர் பாத்திரம் வாங்குவதற்கு முன்னால் பாத்திரத்தின் அடிப்பாகத்திலோ அல்லது வாய் விளிம்பின் பாகத்திலோ ஒரு சிறிய காந்தத்துண்டை கொண்டு செல்லுங்கள் காந்தத்துண்டு பாத்திரத்தோடு ஒட்டினால் அது மட்டமானது ஆகும்.*

*புத்தகம் செய்தித்தாள் மற்றும் முக்கியமான பேப்பர்களில் எண்ணெய் பட்டுவிட்டால் தாமதியாமல் கோலமாவை கறை மேல் தூவினால் போதும் எண்ணெய் உறிஞ்சிப்பட்டு சில மணி நேரங்களில் கறை அகன்று விடும்.*

*ஹெல்மெட்டை தலையில் பொருத்திக் கொள்வதற்கு முன் அதன் உட்புறத்தில் ரப்பர் மற்றும் ஸ்பான்ஞ் மடிப்புகளை ஒரு முறை பார்த்துவிட்டுத்தலையில் பொருத்துங்கள் காரணம் அந்த மடிப்புகளில் ஏதேனும் பூச்சிகள் தங்கும் வாய்ப்பு உள்ளது.*

*தேநீர் அருந்தும் போது தவறி ஆடையில் கொட்டி கறையானால் உடனே சிறிதளவு தண்ணீர் கலந்த பாலை அந்த கறை மீது தேய்த்து விடுங்கள் கறை மறைந்து விடும்.*

*புளோரசன்ட் பெயின்டை வாங்கி வீட்டிலுள்ள எலக்ட்ரிக் சுவிட்சுகளில் அழகாக வட்டமாகவோ சதுரமாகவோ தடவி வையுங்கள். வெளியே சென்று விட்டு வரும் போது இருட்டில் சுவிட்சை தேட வேண்டியில்லாமல் அந்த பெயின்டால் சுவிட்ச் போர்டு வண்ணம் தெரியும்.*

நன்றி சசிரேகா

*பகிர்வு*

No comments:

Post a Comment