ஆடி_மாதத்தில்_தினம்_ஒரு_மகமாயி..!!
ஆடி மாதம் -18ஆம் நாள்..!!
சிங்கப்பூர் முத்து மாரியம்மன்..!!
☄🚢சிங்கப்பூரில் இன்று நடுநாயகமாக நிற்கும் கோயில்களையும், அரசாங்கக் கட்டிடங்களையும் சாலைகளையும் அமைத்த பெருமைக்குரியவர்கள் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகள் தான். அவர்கள்தான் இங்குள்ள கலைநயமிக்க ஆலயங்களை முதலில் உருவாக்கியவர்கள். 1827-ல் முதன்முதலில் கட்டப்பட்ட சவுத் பிரிட்ச் சாலை மகாமாரியம்மன் கோயிலைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூரில் மொத்தம் 32 இந்துக் கோயில்கள் உள்ளன.
☄🚀மகாமாரியம்மன் ( கிளிங் ஸ்டிரிட்) கோயில் சிங்கப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில். மகா மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827-ல் அமைக்கப்பட்டது.
☄🌍மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.
☄🚀இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயணப்பிள்ளை என்பவர் ஆவார். கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில் முன் வந்தது.1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது. 1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
சேர்ந்த பண்டாரமும் ஒருவர். தமது ஊர் முத்து மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த அவருக்கும் உறவினருக்கும் இடையில் எழுந்த பிரச்சனையால், கோயிலில் இருந்த அம்மன் சிலையை தன்னோடு எடுத்துக் கொண்டு பினாங் வந்திறங்கினார். சிங்கப்பூர் வந்த அவர் அம்மன் சிலைக்கு சிறிய கோயில் ஒன்றை கட்ட நாராயணப் பிள்ளையின் உதவியை நாடினார்.
☄🌍அப்போது சிங்கப்பூரில் இந்துக்களின் எண்ணிக்கை பெருகவே கோயிலுக்கான தேவை ஏற்பட்டது.கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்க கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில்முன் வந்தது. வழிப்பாட்டுத் தலத்திற்கு ஆங்கிலேயரால் சுட்டிக் காட்டப்பட்ட இடம் தெலுக்காயர்
தெலுக் ஆயர் சாலை (Telok Ayer Street) ஆனால், அவ்விடம் இந்து சமய ஆலய ஆகமங்களுக்கும்
சடங்குகளுக்கும் உரிய இடமாக அமையவில்லை. தினம் நடக்கும் அபிஷேகத்திற்கு நல்ல நீர்
கிடைக்காத இடமாதலால் அந்த இடம் தவிர்க்கப்பட்டது.
☄🚀அப்போது நகரத் திட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. 1819 - 1823 காலக்
கட்டத்தில் சிங்கப்பூரின் பிரிட்டிஷாரின் பிரதிநிதியாக இருந்தவர் மேஜர். பார்குவார். கோயில் கட்ட ஸ்டாம் போர்ட் கால்வாய் (Stamford Canel) அமைந்துள்ள பகுதியில் இந்துக்கோயில் கட்டுவதற்கு
நாராயணப்பிள்ளைக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடமும் வழிபாட்டுக்கும், ஆலயத்திற்கும்
உகந்த இடமாக அமையவில்லை. இறுதியாக 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த *அம்மன் சிலையை மரப்பலகை,* கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது.
☄🚀16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில் 1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான பெரிய அம்மன் எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962–ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தினால் இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப் படுகிறது
☄🚀ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்ட நான்கு நிலைக்கொண்ட கோபுரமும், அதனை ஒட்டி அமைக்கப்பட்ட வாயில் நிலையையும் மாறாமல் இருக்க, காலத்திற்கு ஏற்ற உள்ளமைப்பு மாற்றம் பெற்று அன்றும் இன்றும் தமிழர் சமுதாயத்திற்கு ஒரு முக்கிய வழி பாட்டு தலமாகவும், சமூக சேவை நிலையமாகவும் இருந்து வருகிறது.
☄🌍இந்திய திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்து செய்யும் பதிவகமாகவும் மகா மாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி திருமணச் சடங்கும் முறைப்படி நடைபெறுகிறது. தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஆதரவு நல்கி வருகிறது.
கோயிலுக்கு எடுத்துச் செல்லும் வழக்கமிருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால் 1900 களின் தொடக்கத்தில் மாரியம்மன் கோயிலும்,பெருமாள் கோயிலும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் வந்தததை
தொடர்ந்து கரகத்தை பெருமாள் கோயிலிருந்து கட்டி எடுத்து வரும் வழக்கம் தொடங்கியது.
வழக்கமாக மாலையில் நடந்து வந்த தீமிதி 1999-ஆம் ஆண்டு முதல் அதிகாலையில் நடத்தப்படுகிறது.
அதன் மூலம் நீண்ட காலம் தடைப்பட்டிருந்த திரௌபதையின் இரத ஊர்வலத்தைத் தீமிதி தினத்தன்று மீண்டும் நடத்த வழி ஏற்பட்டது.
நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரௌபதைஉற்சவம் ஆகியவிழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.
தொடரும்
🌹வாழ்க வளமுடன்🌹
🙏ஓம் சக்தி பராசக்தி🙏
No comments:
Post a Comment