ஆடி அமாவாசை ஸ்பெஷல்
எளிய தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 10
தர்ப்பணம் - அர்க்யம்.
புலிப்பாணி : 'தர்ப்பணத்துக்கும், அர்க்யத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ஐயனே!"
ஸ்ரீஅகஸ்தியர் : ''பொதுவாக தெய்வ மூர்த்திகளுக்கும், மஹரிஷிகளுக்கும். மஹான்கள், யோகிகளுக்கும் மற்ற உத்தம நிலையடைந்தோர்க்குமே அர்க்யம் அளிக்கப்படுகிறது. 'அர்க்யம்' அளித்தல் என்றால் 'சமர்ப்பணம் செய்தல்' என்று பொருள்."
போகர் : "பிரம்ம தர்ப்பணம் என்று சிலர் கூறுவது எவ்வகைத் தர்ப்பணத்தைக் குறிக்கிறது? குருதேவா!"
ஸ்ரீஅகஸ்தியர் : "உள்ளங்கையின் மணிக்கட்டினை ஒட்டிய பகுதிக்கு 'பிரம்ம ஸ்தானம்' என்று பெயர்.
உள்ளங்கையில் நீரெடுத்து உள் புறமாக மணிக்கட்டு வழியே நீரை அர்க்யமாக வார்த்தலுக்கு 'பிரம்ம அர்க்யம்' அல்லது 'பிரம்ம தர்ப்பணம்' என்று பெயர்."
பிரம்ம ஸ்தானத்தில் பட்டு வரும் எந்த நீரும் புனித பிரம்ம தீர்த்தமாக அமைந்து நம்மைப் புனிதப்படுத்தும் சக்தியைப் பெறுகிறது. இதன் காரணமாகவே சந்தியா வந்தன பூஜையில் 'கேசவா, நாராயணா, மாதவா' என்றும். 'அச்யுதா, அனந்தா, கோவிந்தா' என்றும் உள்ளங்கையில் நீரை ஊற்றிப் பிரசாதமாக அருந்துகிறோம். கோயில் தீர்த்தங்கள், புண்ணிய நதி நீர் போன்ற வற்றையும் பிரம்ம தீர்த்தமாகவே உள்ளங்கையில் ஏற்று அருந்துகிறோம்.
தர்ப்பண மகிமை தொடரும்..
ஓம் குருவே சரணம்
No comments:
Post a Comment