தாயாரை விற்கலாமா?
(பசு வதை பற்றி பெரியவாளின் ஆதங்கம்)
("கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம்.குளிப்பாட்டறோம் குங்குமம் வைக்கிறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம்.(ஈஸ்வரன் கோயிலுக்குக் கொடுக்கறதில்லே) ஆனா வயசாகிப்போய்,பால் மரத்துப் போச்சுன்னா..வீட்டில் வெச்சுக்கிறதில்லை. கசாப்புக் கடைக்காரன் கிட்டே வித்துடறோம். அநியாயம்! ஸகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படிக் கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார் ! வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து,வயதான பசுக்களை சம்ரட்சிக்கணும்.." )
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம் -காஞ்சி மகான் தரிசனம்
ஓரு நாள் தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம், 'தாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால் தாயாரை விற்கலாமா? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள், பெரியவாள்.
தொண்டர்களுக்குப் புரியவேயில்லை.
தாயாரை - வயதான தாயாரை - ஏன் விற்கணும்? விற்றாலும் யார் வாங்குவார்கள்? தாயாரை விற்றதாக கேள்விப்பட்டதில்லையே?
"தாயாரை விற்பது கூடாது" என்று எல்லாரும் ஒருமுகமாகக் கூறினார்கள்.
"அப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்து கொண்டிருக்கு.. எந்த மாநிலத்தில்? ஹிமாசல் பிரதேசத்திலா? அருணாசல பிரதேசத்திலா" நம்ம தமிழ்நாட்டில் தான்! தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது.. வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்..."
பெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டுப் பேசியதை, ஆண்டாண்டுக் காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கூடக் கேட்டதில்லை.
"கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம் குங்குமம் வைக்கிறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம்.(ஈஸ்வரன் கோயிலுக்குக் கொடுக்கறதில்லே) ஆனா வயசாகிப் போய்,பால் மரத்துப் போச்சுன்னா வீட்டில் வெச்சுக்கிறதில்லை. கசாப்புக் கடைக்காரன் கிட்டே வித்துடறோம். அநியாயம்! ஸகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படிக் கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார் ! வசதிப் பட்டவர்கள் கோசாலை வைத்து, வயதான பசுக்களை சம்ரட்சிக்கணும்.."
பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் --பஞ்சகவ்யம், ஈஸ்வர பூஜைக்குத் தேவையானவை.
பசுக்களிடம் எல்லையில்லாத பாசம் பெரியவாளுக்கு. அவற்றைக் கண்டால் கோகுலத்துக் கண்ணனாகவே மாறி விடுவார்கள்பெரியவா..
Jaya Jaya shankara hare hare shankara
No comments:
Post a Comment