02.04.2022 Saturday
ருசியான சமையல் குறிப்பு. நீங்களும் செய்யலாம்.
====
1) கத்திரிக்காய் தக்காளி கொஸ்து.
கத்திரிக்காய் கொண்டு எப்போதும் சாம்பார், பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக கத்திரிக்காயை தக்காளியுடன் சேர்த்து கொஸ்து செய்து சாப்பிடுங்கள். இந்த கொஸ்தானது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இந்த கத்திரிக்காய் தக்காளி கொஸ்துவை முயற்சிக்கலாம்.
🍱தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
🍴செய்முறை: 👇
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் புளிச்சாறு சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!
++++++++
2) சப்பாத்தி குருமா <
சமையலில் டிபன் வகைகளில் ஒன்று சப்பாத்தி.
👉 அந்த வகையில் சப்பாத்திக்கு ஏற்ற குருமாவை சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பீன்ஸ் - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு - கால் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
லவங்கம் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
🌟 சப்பாத்தி குருமா செய்வதற்கு முதலில் இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
🌟 பின்பு மிக்ஸியில் தேங்காய்த்துருவல், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு அரைத்துக்கொள்ளவும்.
🌟 அடுத்து வெங்காயம், உருளைக்கழைங்கு, தக்காளி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
🌟 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, பட்டை, கிராம்பு, லவங்கம், கறிவேப்பில்லை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
👉 வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளியை போட்டு வதக்கவும்.
🌟 தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைத்துக்கொள்ளவும்.
🌟 குருமா சுண்டி வரும்போது கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால் மணமணக்கும் சப்பாத்தி குருமா ரெடி.
No comments:
Post a Comment