கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!
அருள்மிகு ஸ்ரீ துர்கையம்மன் திருக்கோயில்..
பட்டிக்கன்று மணலினால் ஓர் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன
பட்டீசுவரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள்.
தேவலோகப் பசுவான காமதேனுவின் மகள் பட்டி, இங்கே ஈசனைப் பூசித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் என்றாயிற்று. கோயிலின் வடக்கு வாயிலில் சுமார் ஆறடி உயரமுள்ள துர்க்கை அருள்கிறாள்.
சாந்த வடிவமாக, எட்டுத் திருக்கரங்கள், முக்கண்களுடனும், காதில் குண்டலங்கள் துலங்க அன்னை மீனாட்சியைப் போலவே கையில் கிளி ஏந்திப் பரவச தரிசனம் அளிக்கிறாள் துர்க்கை.
அன்னை கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் போன்றவற்றை ஏந்தி வலக் கரத்தை அபயமாகவும், இடக்கரத்தை தன் தொடையின் மீது இருத்தியும் அழகே வடிவாய் உள்ளாள்.
பொதுவாக காளி மற்றும் துர்க்காம்பிகைக்கு சிம்ம வாகனம் மேற்கு நோக்கியே காணப்படும். ஆனால் இந்த துர்க்கையின் சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி வித்தியாசமாகக் காணப்படுகிறது.
பட்டீஸ்வரம்
கும்பகோணம்.
தஞ்சை மாவட்டம்.
No comments:
Post a Comment