காஞ்சீபுரம் இட்லி..
காஞ்சீபுரம் பட்டு..
காஞ்சி வரதராஜப் பெருமாள்..
காஞ்சி அத்தி வரதர் குளம்..
காஞ்சி மடம்..
காஞ்சி கைலாச நாதர் கோவில்..
காஞ்சி சித்திர குப்தர் கோவில்..
இன்னும் காஞ்சிக்கு பெருமை சேர்க்கும் தலங்கள் பல இருந்தும்..கூடுதல் பெருமை சேர்ப்பது..
பெருமாள் கோவிலில் நிவேதனமாகப் படைக்கப் படும் காஞ்சிபுரம் இட்லி..
குடலை இட்லி என்றும் இதற்கு பெயர் உண்டு..
பெரிய இட்லிப் பானையில் இரண்டடி ..மூன்றடி உயரத்திற்கு மூங்கில் குழாய்களில்..தையல் இலை வைத்து அரைத்து தாளித்த மாவை சேர்த்து செய்வார்கள்..
காஞ்சீபுரம் இட்லி பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா..
எப்படி செய்வது என்று பார்ப்போமா ..
தேவை..
புழுங்கலரிசி..1 கப்
(நிவேதனம் செய்வதென்றால்
பச்சரிசியே 2 கப் எடுத்துக் கொள்ளலாம்).
வெந்தயம் .1 tsp..
முந்திரி பருப்பு..20 nos
பெருங்காயத் தூள்
சுக்குத் தூள்
மிளகு தூள்
(சீரகம் மற்றும் மிளகை கர கர என்று பொடித்து சேர்த்துக் கொள்ளவும்).
வாழை இலை..
இருந்தால் வாசனையாக இருக்கும்.
நல்லெண்ணெய்..
சிறிது..
கடுகு..
உளுத்தம் பருப்பு..
கடலைப் பருப்பு..
தாளிதம் செய்ய..
செய்முறை..
அரிசி..உளுந்து..
வெந்தயம்.. மூன்றையும் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்..பின் அதனை கரகரப்பாக அரைக்கவும்..உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்..
எட்டு மணி நேரம் கழித்து பார்த்தால்.. அது நன்கு பொங்கி வந்திருக்கும்..
கடலைப் பருப்பு..
உளுத்தம் பருப்பு..
கருவேப்பிலை..
முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்..
பின் அதை மாவில் சேர்க்கவும்..
அதே கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சுக்கு..மிளகு..சீரகம்..பெருங்காயத் தூள் சேர்த்து வறுக்கவும்..அதையும் மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..
இட்லி பானையில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்..ஒரே அளவுள்ள தம்ளர் அல்லது கிண்ணத்தில் சிறிது சிறிதாக வெட்டிய வாழை இலையை கீழ் பாகத்தில் வைத்து..சுற்றுப் புரத்தில் ..நன்கு தணலில் வாட்டிய வாழை இலை வைத்து முக்கால் பாகத்திற்கு மாவு விடவும்..
பத்து முதல் பதினைந்து நிமடங்களுக்கு நன்கு வேக வைக்கவும்..
வெந்து விட்டதா என்று கத்தி அல்லது ஸ்பூன் போட்டு சரி பார்க்கவும்.
சற்று ஆறியதும் வெளியில் எடுத்து துண்டுகள் போட்டு..நல்ல காரச் சட்னியுடன் தேங்காய் சட்னியுடன் அல்லது மிளகாய் பொடியுடன் பரிமாறவும்..
சுவையான..
ஆரோக்கியமான..
காஞ்சிபுரம் இட்லி தயார்..
செய்து பாருங்கள்..
நன்றி..
பின் குறிப்பு..நான் எப்போதும் போல உள்ள இட்லி தட்டில் தான் செய்தேன்..முன்பு ஒரு முறை தம்ளரில் செய்தேன்..அவரவர் விருப்பம் போல செய்யவும்.
பொதுவாக புழுங்கல் அரிசி பண்டங்களை சுவாமிக்கு நிவேதனம் செய்ய மாட்டார்கள்..
நன்றி..
No comments:
Post a Comment