வெங்காய வடை
Viji
*தே பொருட்கள்*
வெங்காயம். : 3(நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கவும்)
கடலைமாவு. : 2 கப்
அரிசி மாவு. : 1 கப்
மிளகாய்த்தூள். : 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள். : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை. : சிறிது
எண்ணெய். : தேவையான அளவு
செய்முறை.
1. அகலமான பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொண்டு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
2. ஐந்து நிமிடம் கழித்து எண்ணெயில் சிறிய சிறிய வடையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
3. தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment