மூன்று தலைமுறை - 8
புண்யாக வாசனம் முடிந்த அடுத்த நாள் பஞ்சு குடும்பம் ஊருக்கு கிளம்பியது.போகும்போது மங்களம் ஜானகியிடம் 'என் பேரனையும் விசாலியையும் எப்போது அனுப்புவதாக உத்தேசம்'என்று கேட்டாள்.
ஜானகி பதிலுக்கு 'விசாலிக்கு கொஞ்சம் உடம்பு தேறட்டும்.நல்ல நாள் பார்த்து கொண்டு விடறோம்' என்றாள்.
பஞ்சுவிற்கு விசாலியையும்,விசுவையும் விட்டு பிரியவே மனமில்லை. குழந்தைக்கு முத்தம் கொடுத்த பின் விசாலியைப் பார்த்து "வேளா வேளைக்கு சாப்பிடு. குழந்தை பத்திரம்' என சொல்லிவிட்டு கிளம்பினான்.
பின்பு சுந்தரேசனும், ஜானகியும் அஷ்டபுஜ காளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து விட்டு வந்தார்கள். பிள்ளை பெற்ற மூன்றாம் நாளிலிருந்தே விசாலிக்கு பத்திய சாப்பாடு போடப்பட்டது.( விசாலிக்கு பத்திய சாப்பாடு பிடித்து போயிற்று.
காரணம் என்னவென்றால் அந்த உணவு அவ்வளவு சுவையாக இருந்தது. வாய்க்கும்,வயிற்றுக்கும் எந்தக் கேடும் செய்யாத உணவு அது.குழந்தைக்கு வேண்டிய பால் தாய்க்கு சுரக்கும்படியாக இச்சமயலை செய்வார்கள். தாய் உண்ணும் இந்த பத்திய உணவுகளால் பாலருந்தும் சிசுவுக்கு எவ்வித வயிற்றுக் கோளாறுகளும் ஏற்படாது.
பத்திய சமையல்களில் பொதுவாக பாசிப் பருப்புதான் சேர்க்கப்படும். சிலவற்றிற்கு தாளிப்பு இருக்கும். சிலவற்றிற்குத் தாளிப்பு தேவைப்படாது. மிளகு சீரகம், சித்தரத்தை, திப்பிலி, இதெல்லாம் இதில் உபயோகிக்கப்படும்). விசு சமர்த்தாக இருந்தான்.விசாலி கண்ணயரும்போது சில சமயம் அழுவான்.
ஜானகி விசாலியிடம் குழந்தையை எடுத்து விடச்சொல்லுவாள்.
கொஞ்ச நேரம் ஆனதும் பால் குடித்த மயக்கத்தில் விசு தூங்கி விடுவான்.விசு உறங்குவதையும்,அசைவதையும், கை கால் நீட்டி மடக்கி பூ மாதிரி கிடப்பதையும், மலங்க மலங்க விழித்துப் பார்ப்பதையும் காணக்காண விசாலிக்கு பரமானந்தமாக இருக்கும். விசுவின் முகத்தில் திடீரென சிரிப்பு மலரும்.
(பெரியவர்கள்,கடவுள் குழந்தைக்கு காட்சி அளிப்பதே குழந்தை முழித்திருக்கும் போதோ தூங்கும் போதோ சிரிப்பதின் காரணம் என சொல்வார்கள்) இதழ் பிதுங்க வரும் அழுகை இவற்றையெல்லாம் காணக் காண விசாலிக்கு ஜென்மமே சாபல்யம் அடைந்துவிட்டதாக தோன்றும்.பாரதியின் ' சின்னஞ்சிறு கிளியே'வில் வரும் 'செல்வ களஞ்சியமாகவே' விசு விசாலிக்கு தென்பட்டான்.
ஒரு பெண் தான் கருவுற்றிருக்கும் காலத்தில் உடலால் பல துன்பங்களை அடைகின்றாள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தை மழலை முகம் பார்த்து தன் துன்பத்தை மறந்துவிடுகின்றாள். இதனை,
தூளியில் விசு ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 15 மணி நேரம் தூங்கினான்.
நடுவில் பஞ்சுவும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வந்து விசாலியையும், விசுவையும் பார்த்து விட்டு செல்வான்.
No comments:
Post a Comment