Wednesday, March 15, 2023

புள்ளிமான் வேட்டை - 60

 புள்ளிமான் வேட்டை - 60

மறுநாள் நிச்சயதார்த்தம் மாலை நாலு மணிக்கு ஆரம்பமானது. திருச்சியிலிருந்து ராமகிருஷ்ணனும்,உமாவும் வந்திருந்தார்கள். அடுத்த ஒன்பது மாதத்துக்குள் ஒரு நாள் முகூர்த்தத்துக்கு குறிக்கப்பட்டிருந்தது. சென்னை டி. நகரில் உள்ள கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தையே ஏற்பாடு செய்து விடுமாறு சுப்பிரமணியத்தை. சரசா, பாலகிருஷ்ணன் தம்பதிகள் கேட்டுக்கொண்டார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து ஏழு மணிக்கு டின்னர் பரிமாறப்பட்டது.

அன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடித்து ஹரீஷ் குடும்பமும், சுப்பிரமணியன் குடும்பமும் சென்னை வந்தது. கிருஷ்ணன் இரண்டு நாள்  தங்கி விட்டு பின்பு சென்னை  வந்தான். மதுரையிலிருந்து வந்த அடுத்த நாளே ஹரிஷும்,தாரிணியும் அசோக் நகரில் உள்ள லேடி டாக்டரை பார்த்துவிட்டு வந்தார்கள். பிரக்னன்சி கன்பர்ம் ஆகியிருந்தது.வீட்டுக்கு வரும்போது மறக்காமல் ஆவினிலிருந்து மைசூர்பா வாங்கிக் கொண்டு சென்றார்கள். வீட்டு வாசலில் குழந்தை மிருதுளாவை இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த  சுலோச்சனாஹரீஷை பார்த்து "என்னடா ஆச்சு" என்றாள்."உள்ள வாம்மா சொல்றேன்" என்றான் ஹரீஷ். ஸ்வீட் பாக்கெட் ஓபன் பண்ணி "ஸ்வீட் எடுத்து கோ" என்றான். சுலோச்சனா விஷயத்தை புரிந்து கொண்டு தாரிணியை பார்த்து" ரொம்ப சந்தோஷம்டி அம்மா" என்றாள். "நல்லபடியா பெத்து பொழைக்கணும்" என்றவள் "உங்க அம்மாக்கு சொல்லீட்டியா"என்றாள். "இல்லம்மா.இனிமே தான் சொல்லணும்" என்றாள் தாரிணி. "முதல்ல அதை செய்" என்றாள் சுலோச்சனா. தாரிணி  அம்மாவுக்கு போன் செய்து  விஷயத்தை சொன்னாள். "கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்குடி. நான் வர வாரம் வந்து உன்னை பாக்கறேன்" என்றாள்.அடுத்த வாரம். நிறைய பக்ஷணங்ளை  செய்து எடுத்துக் கொண்டு தாரிணியின் அம்மா சென்னை வந்து ஒரு வாரம் தாரிணியுடன் தங்கி விட்டு போனாள்.நாளாக நாளாக தாரிணியின் சௌந்தர்யம் கூடிக்கொண்டே போனது.வளைகாப்பு, சீமந்தம் முடிந்தது.(தாரணிக்கு இது முதல் குழந்தை இல்லையே எப்படி சீமந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் சிலர் கேட்கக் கூடும். ஹரீஷுக்கு இது முதல் குழந்தை.மேலும் சுலோச்சனா வளைகாப்பும்,சீமந்தமும் பண்ண வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள்)

வழக்கம் போல கிருஷ்ணன் சனி ஞாயிறுகளில் தன் வருங்கால மாமனார் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். மாதத்திற்கு இருமுறை  ஞாயிற்றுக்கிழமை சாயங்காலங்களில் கிருஷ்ணனனும், சுநந்தாவும் பீச்சுக்கு போய் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தாரணிக்கு மசக்கை இருந்ததா. மாங்காய் மற்றும் சாம்பல் அவள் சாப்பிட்டாளா என்பது போன்ற விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

சுநந்தா சமயம் கிடைக்கும் போதெல்லாம் தாரிணியை சென்று  பார்த்துவிட்டு வருவாள். அப்போதெல்லாம்  சம்யுக்தா தாரிணிக்காக வீட்டிலே செய்த சில பலகாரங்களை கொடுத்தனுப்புவாள்.  சுநந்தா, கிருஷ்ணனுடைய கல்யாண நாளும் நெருங்கி  வந்தது.

கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தில் தான் கல்யாணம் ஏற்பாடானது.

கல்யாண தேதிக்கு நாலுநாள் கழித்து தான் தாரிணிக்கு டெலிவரி டேட் கொடுக்கப்பட்டிருந்தது. கல்யாணத்துக்கு முதல்  காலையில் விரதம் முடிந்து மதியம் சாப்பிட ஒரு மணி ஆனது. மாலை 4 மணிக்கு நிச்சயதார்த்தம்.  ஞானாம்பிகை கேட்டரிங் தான் சமையல்.சாயங்காலம் ரிசப்ஷனுக்கு ஹரீஷ்,தாரணி, சுலோச்சனா,தாரிணியின் அம்மா வந்திருந்தார்கள்.நிறை மாத கர்ப்பிணி தாரிணிக்கு நடக்கக்கூட முடியவில்.புசு புசு வென்று மூச்சு வாங்கியது.  அவளைப் பார்த்து சுநந்தா"இந்த நிலைமையிலும் நீ வந்திருக்கணுமா" என்றாள். அதுக்கு சிரித்துக் கொண்டே தாரணி"எங்க அண்ணா கல்யாணத்துக்கு நான் வராமல் போனால் எப்படி"என்றாள் .அன்று  மாலை நடந்த ரிசப்ஷனுக்கு நிறைய கூட்டம்.சுநந்தாவின் கல்லூரி நண்பர்கள் நண்பிகள், இப்போது உள்ள ஆபீஸ் பிரண்ட்ஸ், கிருஷ்ணனுடைய ஆபீஸ் பிரெண்ட்ஸ்,இதைத் தவிர சுப்ரமணினயுடைய உறவினர்கள்,டாக்டர் ராஜன்,முருகானந்தம். மற்றும் பலர் வந்திருந்தார்கள். மறுநாள் காலை. ஒன்பதில் இருந்து பத்துக்குள் முகூர்த்தம். காலை 6:00 மணிக்கு ஹரீஷ்,தாரிணி மற்றும் சுலோச்சனா,தாரிணியின் அம்மா  வந்து விட்டிருந்தார்கள். காலையிலிந்து எல்லா பங்ஷனனிலும் கலந்து கொண்டார்கள்.

முதல் நாள் இரவு சென்னையில் வந்து இறங்கிய சிவகுருநாதன், மறுநாள் காலை எட்டு மணிக்கு கல்யாணம் மண்டபத்திற்கு வந்து விட்டிருந்தார்.முகூர்த்தத்தின் போது கிருஷ்ணன் மற்றும் சுநந்தா ஆபீஸிலீருந்து Full attendance.

ஷைலு தாலி கட்டும் போது நாத்தனார் முடிச்சு போட்டாள். கல்யாணம் முடிந்ததும் சுப்ரமணியன் ஆனந்தக்கண்ணீர் விட்டார் (சுப்ரமணியம் மாமனார் ஆகிவிட்டார். இனிமேல் அவரை ஒருமையில் அழைக்கத் தகாது)காஞ்சி பெரியவாளை மனதார நினைத்து"பெரும் கஷ்டத்திலிருந்து என்னை மீட்டுவந்து இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்தீட்டேங்களே மகா ப்ரபோ.நான் எப்படி நன்றி சொல்வேன்" என்று கூறிக்கொண்டார். சுநந்தா  தாரிணியை கட்டிக்கொண்டு. அழுதாள். தாரிணி  அவளைப் பார்த்து "சீ. பைத்தியம். எதுக்கு அழுற. நெனச்சுது நடந்தூட்த்தோல்யோ" என்றாள். வழக்கமாக கேட்கும்" மாப்பிள்ளை வந்துட்டாரா? மாட்டுப்பொண்  வந்தூட்டாளா? விஜாரிப்புகள் தொடர்ந்தன.

மதியம் சுநந்தா,கிருஷ்ணன், தாரிணி மற்றும் ஹரீஷ் சேர்ந்து சாப்பிடுவதாக இருந்தது. திடீரென்று தாரணிக்கு வலி எடுக்க ஆரம்பித்தது. அவள் ஹரீஷ் காதில்"வலி ரொம்ப அதிகமா இருக்கு" ."சரி.இப்பவே க்ளினிக்குக்கு போலாம்" என்ற  சொன்ன ஹரீஷ் காரை எடுக்க ஒடினான். சுலோச்சனா தாரிணியை கைத்தாங்கலாகை  கூப்பிட்டுக்கொண்டு கார் பார்க்கிங்போய் காரில் ஏறி அமர்ந்தார்கள்.சுநந்தா கார் அருகில் வந்து தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு"டேக் கேர். ஒண்ணும்  ஆகாது. பயப்படாத. தைரியமா போயிட்டு வா" என்றாள்.அரைமணியில்  கிளினிக்கில் அட்மிட் செய்யப்பட்டாள். நலங்கின் போது'தாரணிக்கு. எப்படி இருக்கோ'என்று நினைத்துக் கொண்டு,கலங்கி போயிருந்த சுநந்தா  கொஞ்சம் உற்சாகம் இழந்திருந்தாள். எனவே நலங்கின்  விளையாட்டு கொண்டாட்டங்களை அவளால் முழு மனதுடன் ரசிக்க முடியவில்லை.

இரவு ஏழு ஐந்துக்கு மணிக்கு  தாரிணிக்கு *"ஹரி கிருஷ்ணன்"* பிறந்தான். 

நாட்கள் ஓட ஆரம்பித்தன. ஒரு வருடத்தில் கிருஷ்ணன், சுநந்தாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு *சுகிர்தா* என்று பெயரிட்டார்கள். 

-----------------------------------------------------இத்துடன் கதை முடிந்து விட்டது. வேட்டை ஆடப்பட்டிருக்க வேண்டிய புள்ளிமான் தப்பித்தது. ஆனால் நிறைய புள்ளிமான்கள் வலையில் சிக்க  ஆரம்பித்திருக்கின்றன. இந்தக் கதையின் நான்காவது பதிவை நான் போடும்போது எனக்கு ஏற்பட்ட  அனுபவத்தை. உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அன்று கோயம்புத்தூரில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஸ்ரீதர் எனக்கு போன் பண்ணி" என்ன நீங்க. குழந்தை கிள்ளிவிட்டு. தொட்டிலையும் ஆட்டுறீங்க" என்றான். "என்ன ஸ்ரீதர். நீ என்ன சொல்ற புரியல" என்றேன். நீங்க எழுதற கதைல அந்தப் பொண்ணு வேற மதக்காரனை பண்ணிக்க கூடாது அப்படின்னு தீவிரமா இருக்கீங்க. ஆனா உங்க பொண்ணையே ஒரு முஸ்லீமுக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறீங்களே .இது ஞாயமா" என்றார். எனக்கு கோவம் வந்தது. எனக்கு ஒரு பெண். அவளுக்கு 2001லேயே கல்யாணம் ஆகிவிட்டது. நல்ல இடம். என்னுடைய மதம், என்னுடைய இனம், என்னுடைய சப்செக்ட்.இது  தெரிந்தும் ஸ்ரீதர் ஏன் இப்படி உளறுகிறான் என்று நினைத்தேன். ஸ்ரீதர்  உடனே சிரித்துக்கொண்டு"ஒரு கல்யாண பத்திரிக்கை அனுப்பிச்சி இருக்கேன் பாருங்க" என்றான். அதைப் பார்த்ததும் திகைத்து விட்டேன். மீனாட்சி என்ற பெண்ணுடைய தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது மனைவி  ராதாவுடன் சேர்ந்து  மீனாட்சியை சையது இஸ்மாயிலுக்கு. திருமணம் செய்து கொடுப்பதாக பத்திரிக்கை அடித்திருந்தார். அந்தப்  பத்திரிக்கயை வாட்ஸ் அப்பில் எனக்கு ஸ்ரீதர் அனுப்பி இருந்தான். சபை நாகரிகம் கருதி அதை இங்கே வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று நான் அதை இந்த க்ரூப்பில் வெளியிடவில்லை. அப்போதுதான் புரிந்தது,நம்முடைய சமூகம் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. பெண்ணாகப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டிருப்போக, இப்பொழுது பெண்ணின் தகப்பன் பெற்றோர்களே. பெண்ணை வேற்று  மத இளைஞருக்கு. கல்யாணம் செய்து கொடுப்பது மட்டுமில்லாமல் பத்திரிக்கை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் பெண் கோவையில் உள்ள ஒரு அக்ரஹாரத்தை சேர்ந்தவளாம். என்னுடைய உறவினர் ஸ்ரீதரின் இரண்டாவது மகனின் இன்ஜினியரிங் கிளாஸ்மேட் இந்தப்பெண். முதல் மூன்று வருடம் ஒழுங்காக இருந்தவள்,  நான்காம் வருடம் தடம் மாறி போய்விட்டாள் என்று தெரிந்து கொண்டேன். கடவுளே. மீனாட்சியின் அப்பா கிருஷ்ணமூர்த்தியாக இல்லாமல் ஒரு சுப்பிரமணியனாக இருந்திருக்கலாமோ.

No comments:

Post a Comment