Friday, March 10, 2023

புள்ளிமான் வேட்டை - 56

 புள்ளி மான் வேட்டை- 56.

புதன்கிழமை மதியம், லஞ்ச் டேபிளில் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணனின் எதிரில் வந்தமர்ந்த தாரிணி கிருஷ்ணனிடம் "நீ சொன்னதயெல்லாம் யோசிச்சு பாத்தேன் கிருஷ்ணா. எனக்கு இதுல சம்மதம் தான். அதுக்கு முன்னாடி நான் ஒரு தரம் ஹரீயைஷோட அம்மாவை பாக்க முடியுமா" என்றாள். இதைக் கேட்ட கிருஷ்ணன்"ஹரீஷ்  கிட்ட கேட்டூட்டு வர சனிக்கிழமை நீ அவாத்துக்கு வர முடியுமான்னு பாக்கறேன்" என்றான். "ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா" என்றாள் தாரிணி. பின்னர் கிருஷ்ணன் ஹரீஷிடம் தான் தாரணியை சனிக்கிழமை அவன் வீட்டுக்கு அழைத்து வரப் போவதாக கூறினான். ஹரீஷ்"தாராளமா" என்றான். சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு தாரிணியின்  ஹாஸ்டலுக்கு சென்ற கிருஷ்ணன் அவளை பிக்கப் செய்து கொண்டு எட்டு மணிக்கு பழைய மாம்பலத்தில் இருந்த ஹரீஷின் வீட்டை அடைந்தான்.அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் ஹரிஷ் அவர்களை வரவேற்றான். உட்புறம் திரும்பி"அம்மா யார் வந்திருக்கா பார்" என்றான். உள்ளே இருந்து வந்த ஹரீஷின் அம்மா சுலோச்சனா தாரிணியைப்பார்த்து "வாம்மா" என்றாள்.(ஹரீஷ் ஆபீஸ் போட்டோ ஒன்றில் அவளை சுலோசனாவுக்கு அடையாளம் காட்டியிருந்தான்).பின்பு "காபி சாப்பிடறியா" என்றாள்.சரி என்று தலையாட்டினாள் தாரிணி. உள்பக்கம் குரல் கொடுத்த சுலோச்சனா "கொஞ்சம் காபி கொண்டு வாங்கோ" என்றாள். உள்ளே இருந்து இடுப்பில்  குழந்தையை வைத்துக்கொண்டு, காபி கொண்டு வந்த நபரை பார்த்ததும். திடுக்கிட்டாள்  தாரிணி. வந்தது வேறு யாரும் இல்லை. சாக்ஷாத் தாரிணியின் அம்மாவும் அவள் இடுப்பில் ம்ருதுளாவும் தான். "நீ எப்படிம்மா இங்கே" என்றாள் தாரிணி. அதற்ககு கிருஷ்ணன் "இந்தக் கேள்விக்கு உங்க அம்மா பதில் சொல்லறத  விட நான் பதில் சொன்னாதான் ஆப்டா இருக்கும்" என்றவன் "நீ புதன்கிழமை அன்னிக்கு சம்மதம்னு சொன்னதுக்கப்புறம், நேக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்தது. நீ வந்து "எங்க அம்மாவ கன்சல்ட் பண்ணம்ன்னு  ஆரம்பிப்பேன்னு நெனச்சேன். அதனால்தான் நான்  அன்னிக்கு சாயங்காலமே உங்க அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்.ந்யூஸை கேட்ட உடனே உங்க அம்மாக்கு பரம சந்தோஷம். சனிக்கிழமைக்கு நீ ஹரிஷ் வீட்டுக்கு போறதா சொன்னேன். உங்க அம்மாவையும்  கிளம்பி வர சொன்னேன். எல்லோரும் கூடி ஒரேடியாக முடிவு எடுத்ததக்கப்புறம் மேல் கொண்டு குழப்பம் இருக்காது"என்றான் கிருஷ்ணன். "நீங்களும் உக்காந்து கோங்க மாமி" என்று தாரிணியின் அம்மாவை சொன்ன சுலோச்சனா தாரணியிடம்"தோ பார்மா தாரிணி. உன்னையும் உன் குழந்தையையும் நாங்க மனப்பூர்வமா ஏத்துக்குறோம். எப்ப உன்னை என் பையன்  பிடிக்கறதூன்னு   சொன்னானோ, அப்பவே நேக்கும்  உன்ன பிடிச்சூட்த்து.

உன்கிட்ட நான் கேட்டுகறதேல்லாம் ஒண்ணே ஒண்ணுதான் .நீ குற்ற உணர்ச்சியோட இந்த ஆத்துக்கு வர வேண்டாம். பழுச  எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா வரணும்" என்றாள். இதைக் கேட்டு தாரிணி உணர்ச்சிவயப்பட்டு "எனக்கு என்னன்னு சொல்லறதூன்னு தெரியல மாமி"என்றாள். அதை கேட்ட சுலோச்சனா "இன்னும் என்ன மாமி வேண்டி இருக்கு. அம்மா ன்னு  சொல்லப்படாதா" என்றாள். "இனிமே அப்படியே கூப்படறேன் அம்மா "என்றாள்  தாரிணி. கண்களில் பொங்கி வந்த ஆனந்த கண்ணீரைகூட துடைத்துக் கொள்ள முடியாமல் தாரிணியின் அம்மா உணர்ச்சி பிழம்பாக இருந்தாள்.

கிடுகிடுவென நல்ல விஷயங்கள் நடப்பதை பார்த்த கிருஷ்ணன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். "ஹரீஷ். ஏண்டா மரம் மாரி நிக்கற. எல்லாருக்கும் ஸ்வீட் எடுத்து கொடு" என்றான். ஹரீஷ்  கிருஷ்ணா  சுவீட்டிலிருந்து வாங்கி வந்திருந்த மைசூர் பாவை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தான். பின்பு குழந்தை ம்ருதளாவை வாங்கிக் கொண்டான். குழந்தை சர்வ சாதாரணமாக அவனிடம் சென்றாள். இதைப் பார்த்த சுலோசனா"பாரும்மா, குழந்தை என் பையன் கிட்ட ஓட்டிடண்டூட்டா பாரு.  விட்ட கொறயோ தொட்ட குறையயோன்னு  நெனைக்கிறேன்" என்றாள். எல்லோரும்  லன்ச்  சாப்பிட்டார்கள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டி ருந்த பின் கிருஷ்ணன் "ரொம்ப லேட் ஆயிடுத்து. நான் சுநந்தாவாத்துக்கு போணும்" என்றான்.

உடனே ஹரீஷ்"ஆமாமாம்.சுநந்தா காலைலேந்து உன்ன பாக்காம தவிச்சு போயிருப்பா" என்றதும்  அனைவரும் சிரித்தார்கள்.அனைவரும் சிரித்ததால் குழந்தையும் சிரித்தாள். "நானும், குழந்தையும், அம்மாவும்  உன் கூட வரோம்"என்றாள் தாரிணி. நால்வரையும்   காரில் அழைத்துக் கொண்டு ஹரீஷ்  அவர்களை சுநந்தாவின் வீட்டில் டிராப் செய்தான்.

No comments:

Post a Comment