புள்ளிமான் வேட்டை - 55
திங்கட்கிழமை கிருஷ்ணன் தாரிணியிடம் பேசி விட்டு வந்ததைக்கேட்டதிலிருந்து பெரும் மனக்கலக்கத்திலிருந்த சுநந்தா, செவ்வாயன்று காலை தாரிணிக்கு போன் செய்து" மூணு மணிக்கு நம்ம ரெண்டு பேரும் பாத்து பேசலாமா" என் கேட்டாள். அதற்கு. தாரிணி "என்ன ரொம்ப அவசரமா"
என்றாள்.சுநந்தா சிரித்துக் கொண்டே" தல போற அவசரம் தான்" என்றாள். தாரிணி "ஓ.எம்.ஆர் ல இருக்குற சரவண பவன் நோக்கு தெரியுமா. அங்க உன்னால வர முடியுமா. மூணு மணிக்கு நான் வந்துடறேன்" என்றாள். ரெண்டு மணிக்கு பஸ் பிடித்து சுநந்தா மூணு ஐந்துக்கு ஓ.எம்.ஆர் சரவண பவன் போய் சேர்ந்தாள். உள்ளே நுழைந்ததும் காத்துக் கொண்டிருந்த தாரிணியை கண்டாள். "ஹாய்" என்று இருவரும் கூறிக் கொண்டே உள்ளே சென்றார்கள். அங்கு சென்றதும் சுநந்தா அதிக நேரம் எடுக்காமல் தாரிணியும், கிருஷ்ணனும் பேசியதை கிருஷ்ணன் தனக்கு சொன்னதாக விவரித்து கூறினாள். இதைக் கேட்டு தாரணி முதலில் பதில் சொல்லாமல் இருந்தாள்.பின்னர் சுநந்தாவின் கைகளை பிடித்துக் கொண்டு"நேக்கு ரொம்ப குழப்பமா இருக்கு சுநந்தா . ஒரு தரம் பட்டாச்சு. இன்னொரு தடவையும் படணமான்னு பயமா இருக்கு" என்றாள். அதற்கு சுநந்தா "உன்ன ரொம்ப புத்திசாலின்னு நெனைச்சேன். நான் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காத. நல்ல சமயத்துல உனக்கு புத்தி மழுங்கி போய்ட்த்டுது" என்றாள்.
பிறகு அவள்"நீ ஏதாவது முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி என் முழு கதையை நீ தெரிஞ்சக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்" என்று சொன்ன சுநந்தா, தன்னுடைய கதை முழுவதையும் விவரித்தாள். தான் இதுவரை கேள்விப் படாததை கேட்ட தாரிணி திக்பிரமை அடைந்தாள்.சுநந்தா தாரிணியிடம் "நீ உன் கதையை சொல்ல போகத்தான் எனக்கு கண் திறந்தது. மாய வலையில மாட்டிண்டி ருந்த புள்ளிமானான என்னை மீட்டுக் கொண்டு வந்தது நீதான்"என்று சொல்லி தாரிணியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு "
நீ, ஹரிஷை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலேன்னா நேக்கும் கிருஷ்ணனுக்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம் கிடையாதுன்னு கிருஷ்ணன் உறுதியா இருக்கார்.
என் வாழ்க்கையில் ஒளியேத்த வெச்சவ நீ. அந்த தீபத்தை நீயே அணைச்சுடாத" என்றாள் கண்களில் கண்ணீருடன்.அவள் இப்படி கூறிய அடுத்த நொடியே தாரிணி" தோ பார் சுநந்தா. கண்ண தொடைச்சுக்கோ. எல்லோரும் பாக்கறா பார். நோக்கோசரமும், கிருஷ்ணனுக்கோசரமும் நான் ஹரீஷை கல்யாணம் பண்ணிக்க முழு மனசா சம்மதிக்கிறேன். நீ கவலைப்படாம இரு. இனிமே,நீயும் கிருஷ்ணனும் சந்தோஷமா இருக்கிறது பாத்து தான் என் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்" என்றாள்.
இதைக்கேட்ட சுநந்தா தாரணியிடம் "நீ இப்போ எனக்கு பண்ணயிருக்கற உதவிக்கு நான் என் வாழ்நாள் பூரா உனக்கு கடமைப்பட்டிருப்பேன்" என்றாள். அதற்குத் தாரிணி" நம்ப ரெண்டு பேரும் இப்போ பிரெண்ட்ஸ் தான். இன்னும் கொஞ்ச நாள்ல நான் உனக்கு நாத்தனார். அதனால உறவுக்குள்ள நன்றின்ற ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாமே"என்றாள். பின்பு அவள்" நான் உனக்கு நாத்தனாரானதும், யார் கண்டா, நாத்தனார் கொடுமை பண்ணாலும் பண்ணுவேன்" என்றாள். இதைக் கேட்ட சுநந்தா சிரித்துக் கொண்டே"நீ ரொம்ப அதிகமா படுத்தினியான நான் ஹரீஷ் அண்ணா கிட்ட சொல்லி உன்ன செமத்தியா கவனிக்க சொல்வேன்" என்றாள். இருவரும் சிரித்துக் கொண்டு எழுந்தார்கள். பிரிவதற்கு முன்னால் சுநந்தா தாரிணியிடம்"நம்ம இங்க சந்தித்து பேசினத கிருஷ்ணன் கிட்ட சொல்ல வேண்டாம் ப்ளீஸ்" என்றாள். இதைக் கேட்ட தாரிணி"நிச்சயம் சொல்ல மாட்டேன் .நீ கவலைப்படாம போய் வா" என்றாள்.
No comments:
Post a Comment