*புள்ளிமான் வேட்டை - 52
கிருஷ்ணனின் தர்ம சங்கடம் வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவன் இதுவரை தாரிணியின் விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்பொழுது அந்த விஷயத்தை கிருஷ்ணன் சொல்லித்தான் ஆக வேண்டும் .வேறு வழியில்லை.பிறகு கிருஷ்ணன் ஹரீஷைப் பார்த்து "ஹரீஷ். நான் தாரிணியை பத்தி ஒரு உண்மையை உன்னிடம் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயிருக்கேன். நீ இத கேட்ட பிறகு, உன் முடிவு எப்படி இருந்தாலும், நான் சொல்லப்போகும் தாரிணியினுடைய ரகசியத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன்னு நேக்கு சத்தியம் பண்ணி கொடுக்கணம்" என்றான். இதைக் கேட்ட கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. "பரவாயில்லை . நான் சத்தியம் பண்ணி கொடுக்கறேன்.நான் யாரிடமும் எந்த சந்தர்பத்திலும் தாரிணியின் ரகசியத்தை உன்னுடைய பர்மிஷன் இல்லாமல் கூற மாட்டேன்"என்று கூறினான்.
" ஒரு அதிர்ச்சியை கேப்பதற்கு உன்னை தயார் படுத்திக்கோ" என்று ஆரம்பித்த கிருஷ்ணன்" தாரிணி ஒரு டைவர்சி" என்றான். இது ஹரிஷ் எதிர்பார்க்கவே இல்லை." ஓ.எனக்கு இது தெரியாது" என்றான்."ஆபீஸில் எனக்கும் மற்றபடி சுநந்தாவுக்கும் தவிர இந்த விஷயம் யாருக்கும் தெரியாது" என்றான் கிருஷ்ணன். கிருஷ்ணன் தாரிணியின் கதையை முழுவதுமாக சொல்லி முடித்தான். இதைக் கேட்ட ஹரிஷ் இரண்டு நிமிடம் மௌனமாக இருந்தான். பிறகு கிருஷ்ணனிடம் அவன் "தோ பார். கிருஷ்ணா.தாரிணி மேல எனக்கு இப்போ மதிப்பு அதிகமா ஆயிடுத்து. ஏதோ ஒரு சமயத்துல அவ ஒரு தப்பு பண்ணி இருக்கா. அதுக்குண்டான தண்டனையை அவன் கொடுமைப்படுத்தியதின் மூலம் அடஞ்சிருக்கா. நான் அவளை ஏத்துக்கறதல எந்த விதமான மன மாற்றமும் இல்லை" என்றான். இந்த பதிலை கிருஷ்ணன் எதிர்பார்க்கவில்லை
"தோ பாருடா. நீ தாரிணியை கல்யாணம் பண்ணிக்கும்போது அவளுக்கு மாத்திரம் புருஷன் ஆக போறது இல்ல.அவ குழந்தைக்கும் நீ தான் தகப்பன். அந்தக் குழந்தைக்கு நீ தகப்பன்ற ஸ்தானத்தை கொடுக்கணும். அத உன் மனசு ஏத்துக்குமான்னு பாரு" என்றான். அதற்கு ஹரீஷ்."நான் தாரணியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லும்போதே அந்த குழந்தைக்கு நான் தான் தகப்பன்னு உறுதி பண்ணிக் கொண்டேன். அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்" என்றான். இதை கேட்ட கிருஷ்ணன்"இது வரை எல்லாம் நண்ணாத்தான் இருக்கு. ஆனா உங்க அம்மா இதுக்கு ஒத்துப்பாளா? எந்த அம்மாவும் தன் பையன் ஒரு டைவர்சியை கல்யாணம் பண்ணிக்க அனுமதிப்பாளான்னு தோணல " என்று கூறினான்.அதற்கு ஹரீஷ்"நீ சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கு. ஆனா எங்க அம்மா. கட்டுப்பெட்டி இல்ல. கொஞ்சம் ஃபார்வேர்ட் திங்கிங் உள்ளவ. விஷயத்தை அவ கிட்ட சொல்ற விதத்ல சொன்னா அவ ஏத்துப்போன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த ரெண்டு நாள்ல அம்மா கூட நான் பதமா பேசி அவள கன்வின்ஸ் பண்ண பாக்கறேன். திங்கட்கிழமை காலைல உனக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும். ஆனா இதுல ஒரு முக்கியமான ஆன்டி கிளைமாக்ஸ் இருக்கு.அத தாரணி கிட்டேந்து எதிர்பாக்கறேன். இவ்வளவு ஆனதக்கப்புறம் இன்னொரு கல்யாணத்துக்கு அவ ஒத்துப்பான்னு எனக்கு தெரியல" என்றான் ஹரீஷ். கிருஷ்ணன் "உங்க அம்மா முதல்ல ஒத்துக்கட்டும். தாரிணியை கிட்ட சம்மதம் வாங்கறது என் பொறுப்பு" என்றான். இதற்குள் இரவு மணி 12 ஐ தாண்டி விட்டிருந்தது. இருவரும் படுத்து, தூங்க ஆரம்பித்தார்கள். காலையில் எழுந்து பல் தேய்த்து, காபி குடித்ததும் ஹரிஷ் கிருஷ்ணனை சுநந்தாவின் வீட்டில் விட்டு விட்டு வந்தான்.
No comments:
Post a Comment