மூன்று தலைமுறை-9
பஞ்சு ஒரு நாள் கும்மோணம் சென்று குருராஜ் ஜோசியரை பார்த்து விசு பிறந்த தேதி, நேரம் மற்றும் நட்சத்திரம் முதலியவற்றைக் கொடுத்து ஜாதகம் குறிக்கச் சொன்னார். ஜாதகத்தை குறித்த ஜோதிடரும் ஜாதக பலன்களை கூற ஆரம்பித்தார்.விசுவுக்கு பூரண ஆயுளும்,நல்ல ஆரோக்கியமும் இருக்கும் என்று கூறினார்.படிப்பில் அதிக புத்திசாலியாக விளங்குவான் என்றும் கூறினார். இதை கேட்ட பஞ்சுவுக்கு பரம ஆனந்தமாக இருந்தது. அதுக்கப்புறம் ஜோசியர் இன்னும் இரண்டு விஷயங்களை கூறினார்.இந்த இரண்டு விஷயங்களும் ஜோசியர்,பஞ்சு மற்றும் எனக்கு மட்டும்தான் தெரியும்.இதை தெரியப்படுத்தும் வேளை வரும்போது நானே தெரியப்படுத்துவேன். முதல் விஷயம் பஞ்சு வுக்கு மிகவும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. இரண்டாவது விஷயம் அவனுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்தது. இரண்டாம் விஷயத்தை தன்னிடம் சொல்லியிருக்க வேண்டாமோ என்று நினைத்துக்கொண்டான். அடுத்து அவன் நல்லூர் சென்று விசாலியையும் குழந்தையும் பார்க்கும்போது விசாலியிடம் ஜோதிடரை பார்த்து வந்து விஷயத்தைக் கூறினார். குழந்தை அதிபுத்திசாலியாக விளங்குவான் என்று கேட்ட விசாலம் 'எனக்கு இது முன்பே தெரியும் அவர் என் குழந்தை அல்லவா'என்றாள்.
இதை கேட்டு பஞ்சு சிரித்தார்
' நீ E.S.L.C வரைக்கும்தான் படித்திருக்கிறாய். இந்த லக்ஷணத்தில்அவன் உன்னை மாதிரி புத்திசாலியாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்' என்று சொல்லி சிரித்தார்.இதை கேட்ட விசாலி'சரி.சரி.விடுங்கள.படிப்பு எப்படியோ போகட்டும்.நல்ல ஆரோக்கியமாக, தீர்க்காயுளாக இருப்பான் என்று கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'என்றாள்
பிறந்த 45 நாளில் விசு தலையை தூக்க முயற்சித்தான்.
சிலசமயம் தலை தரையில் தட்டியதும் அழுவான்.
விசாலிஅவனை தூக்கி கொண்டு 'வேண்டாண்டா என் செல்லமே.பட்டே' என்றெல்லாம் கொஞ்சுவாள்.
அவனது எடையும் உயரமும் இரண்டு மாதத்தில் கூடின மாதிரி விசாலிக்குபட்டது. 3 மாத முடிவில் விசுவின் பார்வை தெளிவாக பொருட்களின் மேல் திரும்பியது.முக்கியமாக கலர் ஆடைகள் அவன் கவனத்தை கவர்ந்தது.
நான்கு மாதம் நடந்து கொண்டிருந்த போது பேச முடியாவிட்டாலும் பேச முயற்சிக்க உதட்டை கூட்டுவான்.சத்தம் கேட்டால் திரும்பி பார்ப்பான்.
விசுவுக்கு புரிகிறதோ இல்லையோ விசாலி தன் சன்னமான குரலில் பாட்டு பாடுவாள். அவனிடம் பேச்சுகொடுப்பாள்.சிலசமயம் அவன் அவள் பேச்சை கூர்ந்து கேட்கிற மாதிரி நினைத்து கொள்வாள். இரவில் தாலாட்டு பாடுவாள்.தினமும் அவள் பாடல் இதுதான்.
இதே பாடலை தினந்தோறும் கேட்டாலும் சலிக்காது விசுவிற்கு!
4 மாத குழைந்தைக்கு பாட்டு புரியுமா? திரும்ப திரும்ப கேட்பதால் சலிப்புதட்டுமா என ஆராய்ச்சி வேண்டாம்.விசாலிக்கு பிடிக்கிறது பாடுகிறாள். எனக்கு பிடிக்கிறது எழுதுகிறேன்.அவ்வளவே.
விசாலி மட்டுமா இப்பாடலை பாடினாள்.எனது அன்னை லக்ஷ்மி கூட இதே பாட்டை பாடித்தானே என்னை சிறுவயதில் உறங்க வைத்திருக்கிறாள். மறக்க முடியுமா இப்பாடலை?
No comments:
Post a Comment