Friday, March 10, 2023

புள்ளிமான் வேட்டை - 57

 புள்ளிமான் வேட்டை - 57

 சனிக்கிழமை மதியம் முதல்  ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தாரிணி சுநந்தாவின் வீட்டிலேயே இருந்தாள். தாரிணியின் அம்மாவும்,குழந்தையும் அங்கேதான் இருந்தார்கள். வீடே கலகலப்பாக இருந்தது.

தாரிணியும்,சுநந்தாவும் பேசிப்பேசி தீர்த்தார்கள்.அப்படி என்னதான் பேச இருக்குமோ?

"கிருஷ்ணனை ஆபிசில் எப்படி ட்ரீட் பண்றா" என்று கேட்டாள் சுநந்தா."அவன் டீம் மெம்பர்சும் சரி,அவன் பாசும் சரி அவன் மேல பயங்கர மதிப்பு,நம்பிக்கை வெச்சிருக்கா.அவன் என்னிக்காவது லீவு போட்டான்னா அன்னிக்கு ஆபிசே டல்லாயிடும்"என்றாள்தாரிணி.இதைக் கேட்டு பெருமைப்பட்டாள் சுநந்தா.பின்பு அவள் தாரிணியினிடம்"நோக்கு தெரிஞ்சு ஆபீஸ்ல ஏதாவது பொண்ணு கிருஷ்ணனுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்காளா" என்று சுநந்தா கேட்டாள். இதற்கு தாரிணி"ஆமாம். மாளவிகா ஒரு பொண்ணு இருக்கா. திருநெல்வேலியை சேந்தவ. பாக்க  திருத்தமா இருப்பா.

 ஒண்ற மாரிஅவ்வளவு கலர் இல்ல.அவ மாநிறம். அவ அவங்கிட்ட நெருங்கி பழகணும்னு பாத்தா. ஆனா கிருஷ்ணன் ஆரம்பித்திலேயே அவகிட்ட தனக்கு ஃப்ரெண்ட்ஷிப்தானே தவிர, வேற மாதிரி இல்லைன்னு சொல்லிட்டான். முதல்ல கொஞ்சம் மனச கஷ்டப்பட்ட அவ,  பின்னாடி  இவன திருத்த முடியாதுன்னு   தெரிஞ்சுண்டு நார்மல் ஆயிட்டா" என்று சொல்லி சிரித்தாள்.

"அது என்ன 'ஒண்ற விட' என்றாள் சுநந்தா. "ஓ அது உனக்கு தெரியாதா.அதுதான் கோயம்புத்தூர் பாஷை. 'ஒண்ற விட'அப்படின்னா உன்ன விட அப்படின்னு அர்த்தம்" என்றாள் தாரிணி.

ஞாயிற்றுக்கிழமை இரவு  ப்ளூ மௌண்டைன் எக்ஸ்பிரஸில் திரும்பி கோவை செல்ல தாரிணி அம்மாவுக்கு டிக்கெட் முன்பதிவாகியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிக்கு ஹரிஷ்  கிருஷ்ணனுக்கு போன் பண்ணி இருந்தான். தாரணி அம்மாவை சென்ட்ரலில் டிராப் பண்ண வேண்டுமா என்று கேட்டான். "நான் உன்னை மறுபடியும் கூப்பிட்டு சொல்றேன்" என்ற கிருஷ்ணன், இது குறித்து தாரிணியிடம் பேசினான். இதற்கு தாரணி"ஹரீஷுக்கு  தொந்தரவு கொடுக்கவேணாமேன்னு பாக்கறேன் "என்றாள்.

"இதெல்லாம் ஒரு தொந்தரவு இல்ல. ஹரீஷ்,நம்ப எல்லாம் இப்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம்"என்று சொல்லிவிட்டு ஹரீஷுடம்"நீ ஃப்ரீயா இருந்தா வரலாம்" என்று கூறினான். ட்ரெயின் கிளம்புவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாக வந்து சேர்ந்தான் ஹரீஷ். எல்லோரிடமும் சொல்லிக் கொண்ட தாரணி,அவள் அம்மா, குழந்தை,கிருஷ்ணன். ஆகியோர்களை ஏற்றிக்கொண்டு கார் சென்ட்ரலுக்கு சென்றது. ட்ரெயின் கிளம்பும் போது. குழந்தை அவள் அம்மாவைப் பார்த்து அழ ஆரம்பித்தாள். தாரிணின் அம்மா அவளுக்கு ஏதோ விளையாட்டு சாமானை கொடுத்து அவள் கவனத்தை திருப்பினாள்.  

தாரிணியிடம் தனியாக பேசிய அவள் அம்மா"தாரிணி உன் முடிவுல உறுதியா இரு. தடுமாற்றம் வேண்டாம். கூடிய சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண போறேன். உடம்ப பாத்துக்கோ" என்றாள். அதுக்கு தாரணி"நீ கவலைப்படாதம்மா. நான் உடம்ப பாத்துக்கறேன்.நீயும் உடம்ப பாத்துக்கோ. தம்பியை கேட்டேன்னு சொல்லு"என்று சொல்லிவிட்டு குழந்தையை பிரிகிறோமே என்று,வேறு புறம் திரும்பி,கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டாள்.

ஹரீஷ் தாரணியை அவள் ஹாஸ்டலில் வீட்டை விட்டுவிட்டு,கிருஷ்ணனை அவனிடத்தில் விட்டு விட்டு, இரவு வீட்டை அடையும் போது. மணி 11 ஆகிவிட்டது.

அதுவரை விழித்திருந்த அவன் அம்மா சுலோசனா அவனிடம் "ட்ரெயின் கரெக்ட் டயத்துல கிளம்பீட்த்தா"என்று கேட்டுவிட்டு அவனுக்கு தட்டை போட்டு சாதத்தை பரிமாறினாள். சாப்பிட்டு கை அலம்பிய ஹரீஷ். இரவுபடுக்கப் போகும்போதுமணி பன்னிரண்டு.

No comments:

Post a Comment