Monday, March 6, 2023

புள்ளிமான் வேட்டை - 51

 புள்ளிமான் வேட்டை - 51

பின்னர் ஹரிஷ்  கிருஷ்ணனிடம் "மறு நாள் அவ அப்பா போன் செய்தார். எனக்கு சம்மதமில்லை" என்றேன்.காரணத்தை கூறினேன்.அவர் "நல்ல வேளை என்பொண் தப்பினா.உங்களை போல Progressive thinking இல்லாதவன் கிட்டேயிருந்து" என்றார். "ஏண்டா.அந்த ரெண்டாவது பொண்ணு என்னாச்சு? "என்றான் கிருஷ்ணன். அதைக் கேட்ட ஹரீஷ் சிரித்துக்கொண்டே

"முதல்தே பராவாயில்லேன்னு ஆய்ட்த்து"என்றான் .

பின்பு தொடர்ந்த ஹரீஷ்"முதல் தோல்விக்கப்புறம் நான் என் பயோ டேட்டாவை கொஞ்சம் மாத்தி "கல்யாணத்துக்கப்புறம் என் அம்மா என்னோடு இருப்பதை சம்மதிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்" ன்னு போட்டேன்.

ரெண்டு மாசம் கழிச்சு சினேகான்னு ஒரு பெண் என்ன போன்ல கூப்பிட்டா.என் பயோ டேட்டா பாத்ததாகவும்,மதம், ஜாதி, சப் செக்ட் வரை ஒத்துப்போவதாகவும் குறிப்பிட்டு "நான் எடுப்பதே முடிவு.என் வீட்டில் எல்லோரும் நான் சொல்வதற்கு மறுப்பு சொல்லமாட்டார்கள். ஏன்னா நாந்தான் எங்க வீட்ல highest earning member "என்று கூறி சிரித்தாள்.அவளும் ஒரு I.T.கம்பனில H.R.ல இருக்கறதா சொன்னா.அன்னிக்கு சாயங்காலம் டீ.நகரிலுள்ள GRT Grand days 

ல் சந்திச்சோம்.நேரே பாருக்கு அழைத்துச்சிண்டு போனவள் What will you have என்றாள்.ஆப்பிள் ஜீஸ் என்றவுடன் என்னை ஒரு ஜந்துவைப்பார்ப்பது போல் பார்த்து So you dont drink or trying to impress me என்று கேட்டாள்.நான் குடிப்பதில்லை என்றவுடன்" நானும் மூணு வருஷத்துக்கு முன்னாடி வேலைக்கு சேரும் போது உன்னைப்போல "மடி"யாகத்தான் இருந்தேன்.சூழ்நிலை என்னை மாத்தீட்த்து. Any i will respect your feeling and for a change i will join you this time என்று கூறி ரெண்டு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணா.பின்பு என்னிடம்" உன் அம்மாவை வெச்சுகற்தல எனக்கு முழு சம்மதம்.வீக் எண்ட்ல நான் வீட்டில இருக்கமாட்டேன். Almost எல்லா வீக் எண்டும் பார்ட்டி இருக்கும்.பார்ட்டீல Alcohol தண்ணியா ஓடும்.இதைத்தவிர ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் நம்ப வீட்ல பார்ட்டி தரவேண்டி இருக்கும். அத நீயோ, உன் அம்மோவோ Object பண்ணக்கூடாது. முக்யமா எனக்கு சமையல் செஞ்சு பழக்கமில்லை.அதுக்கோசரம் உங்கம்மாதான் தினம் சமைக்கணம்ன்னு நான்  எதிர்பார்க்கமாட்டேன்.வெளிலேந்து வாங்கிக்கலாம்" என்றாள்.ஆப்பிள் ஜுஸ் குடிச்சூட்டு அவளிடமிருந்து தப்பிச்சிண்டு  வந்தேன்" என்றான்.

இவ்வாறு ஹரீஷ் கூறி முடித்ததும் கிருஷ்ணன்" உனக்கு ஏற்பட்ட அனுபவம் ரொம்ப வித்யாசமாவும்,கசப்பாவும் இருக்கு.இத வெச்சு எல்லா பொண்ணும் நளினியாகவோ,சினேகாவாகவோ இருப்பான்னு  நெனைக்றது மகா தப்பு.நளினி டைப் ஒரு 30% இருக்கலாம். ஆனா சினேகா டைப் ஒரு 5% தான்  இருப்பா.நம்ப ஆபிஸ்ல இருக்கற தாரிணி போல நல்ல பொண்ணுங்களும் நெறய பேர் இருக்கா.நெறய பொண்ணுங்க வீடு,குழந்தை,சமையல்ன்னு வீட்ல மாங்கு மாங்குன்னு உழைச்சூட்டு, ஆபீஸ்லயும் உழைக்கறா.உனக்கே தெரியும், ஆபிஸ்ல ஒரு பொண்ணினுடைய ஒர்க் அவுட்புட், ஒரு சராசரி மேல் மெம்பருடைய ஒர்க் அவுட்புட்ட விட குறஞ்ச பட்சம் இருபதிலேந்து முப்பது % கூட இருக்கு.அவா I.Q ரொம்ப அதிகம்" எனக்கூறவும் ஹரீஷ் கிருஷ்ணனிடம்

" நான்சொல்ல வந்தத நீ சுலபமாக்கீட்ட. தாரிணியைப்பத்தி நீ சொன்ன  இல்லையா.அவளப்பத்திதான் நான் பேச வேண்டி இருக்கு என்ற ஹரீஷ் கடைசியாக "நான் தாரிணையை மனமார நேசிக்கறேன். அவ நான் நினைக்கற மாரி பொண்ணுன்னு என் உள் மனசு உறுதியா நம்பறது.அவ கிட்ட டைரக்ட்டா ப்ரபோஸ்  பண்ண தயக்கமா இருக்கு.அவ உம்பேர்ல ரொம்ப மதிப்பு வெச்சிருக்கா.நீதான் எப்படியாவது எங்ளை சேத்து வெக்கணம்" என்றான் கிருஷ்ணனின் கைகளை பிடித்துக்கொண்டு. இதை சிறிதும் எதிர்பார்க்காத கிருஷ்ணன் பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தான்.

No comments:

Post a Comment