Saturday, December 3, 2022

முளை கட்டிய வெந்தயம்

முளை கட்டிய வெந்தயம்

🌿சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியப் பொருள் வெந்தயம். உணவில் வெந்தயத்தைப் பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் சூட்டை தணிக்க, இதயத்தைப் பாதுகாக்க, உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க என பயன்கள் ஏராளம். 

🌿எனினும் சமையலில் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதற்குப் பதிலாக  முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட கூடுதல் பலன் கிடைக்கும். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவதால் புரதச்சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துகள் அதிகளவில் கிடைக்கின்றன. 

🌿 *முளைக்கட்டுவது* *எப்படி* ? 

வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்பின்னர் ஒரு வெள்ளைத்  துணியில் கட்டி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்திற்குப் பின்னர் அதனைப் பார்த்தால் நன்கு முளைகட்டியிருக்கும்

🌿வெந்தயத்தை நேரடியாக உணவுப்பொருளில் சேர்த்தால் கசப்பாக இருக்கும். ஆனால், முளைக்கட்டி சாப்பிட்டால் கசப்பு சுவையே தெரியாது. 

🌿 *பயன்கள்* 🌿

►🌿 நீரழிவு நோயுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. 3 மாதங்கள் தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். 

►🌿 வயிற்றுப் போக்கு, வயிறு வலி, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்.

► 🌿நரம்புகளைப் பலப்படுத்தும்.  கண்களுக்கு குளிர்ச்சி தரும். 

►🌿 சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. 

► 🌿முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு. வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம் அல்லது தலைமுடியை அலசுவதற்கு பயன்படுத்தலாம். வெந்தயத்தை  அரைத்தும் தலைக்கு தேய்த்துக் குளிக்க முடி கருமையாக இருக்கும், வளரும். 

►🌿முளைகட்டிய வெந்தயம் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் இதயக்கோளாறுகள் ஏற்படாது. 

🌿இளம்பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது. தாய்மார்களுக்கு பால் சுரக்க முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடலாம். இளம்பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். 

► 🌿வெந்தயத்தை முளைகட்டி சாப்பிட முடியாதவர்கள் அதை வறுத்து அரைத்து வெந்தயப் பொடியாக பால் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். 

► 🌿வெந்தயம் அதிகம் குளிர்ச்சி என்பதை நினைவில்கொள்ள வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளவும். 

Viji

*********

No comments:

Post a Comment