Sunday, December 11, 2022

பஞ்சத்வாரகா... புனித யாத்திரை-1

 நமஸ்காரம் 🙏🙏.             (பதிவு ஒன்று )

பஞ்சத்வாரகா... புனித யாத்திரை... திவ்யதேசம் சேவிக்க புறப்பட்டோம் 🙏

............................................................................

🌹. நானும் எனது மனைவியும் இதுவரை 92 பெருமாள் திருக்கோயில்கள் சேவித்து விட்டு இப்போது துவாரகாதீசனை சேவிக்க புறப்பட்டோம்....

எனது சகோதரன் கபாலீஸ்வன் மற்றும் அவர் மனைவி ஜெய சாவித்ரி யுடன்..

.............................................................................

🌺 72 பக்தர்களுடன் புதுடெல்லி யிலிருந்து இரண்டு VOLVO பேருந்தில் 11.11.2022 இரவு புறப்பட்டு மறுநாள் 12.11.2022 காலை 5.30 மணி அளவில் புஷ்கர் ஏரி வந்து சேர்ந்தோம்...

🌹இது ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய புண்ணிய தல ஏரி.

🌺புஷ்கர் நுழைவு எல்லையில் அமைந்து இருந்த ஸ்ரீ கெளதம் ஆசிரமம் என்ற மிக பெரிய தங்கும் இடத்தில்.. ஒரு ரூமுக்கு இருவர் தங்கும் படி  அனைவருக்கும் ரூம்ஸ் தரப்பட்டது..

🌺எல்லா வசதிகளும் கொண்ட.. பெரிய அளவில் ரூம்.. அது.. சுற்றி இரண்டு floor  நடுவில் புல் தரை யுடன் பெரிய லான்.. பார்க்கவே மிகவும் அழகு..👌

🌺அங்கேயே சமையல் அறை ஏற்பாடு எல்லாம்.. முதலில் சுடச்சுட காபி கொடுக்க பட்டது.. அது அந்த குளுமைக்கு இதமாக இருந்தது..

🌹நாங்கள் எல்லோரும் முன்பே சொன்ன படி.. ஒரு dress.. துண்டு எடுத்து கொண்டு புஷ்க்கரில் புனித நீராட புறப்பட்டோம்..

🙏உண்மையில் தெய்வாம்சமாக தெரிந்தது இந்த புஷ்கர்..

🙏இந்து வேதங்கள் இந்த இடத்தை "தீர்த்த ராஜ் " என்று குறிப்பிடுகிறது..

🙏இங்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவே புனித நீராக இருப்பதாக நம்ப படுகிறது...

ரொம்ப ஜில் கிளைமேட்.. நீரில் காலை வைக்கும்போதே..😟😟

🙏பகவானை நினைத்து முழுக்கு போட்டு எழுந்தோம்.. போய்விட்டது குளிர்.

குளித்து உடை மாற்றி...

🌹அருகில் இருக்கும்.. ஸ்ரீ ப்ரும்மா கோயில்..சேவிக்க புறப்பட்டோம்.

🙏உலகில் எங்கும் ப்ரும்மா விற்கு கோயில் கிடையாதாம்.. இதுதான் அவருக்காக  உள்ள  பிரத்யேகமான கோயில் என்றார்கள்..

🙏பிரம்மா புஷ்கரில் உள்ள மலை மீது சாவித்திரியை மணந்ததாக சொல்லப் படுகிறது.

மேலும் இங்குதான் காயத்ரி தேவியை மணந்தார் என்கிறது ஐதீகம் . 🙏

🙏 இங்கு தான் ஸ்ரீ காயத்ரி மந்திரம் முதன் முதலில் விஸ்வாமித்திரர் மகரிஷியால் உபதேசிக்க பட்டதாம் 🙏

🌹இது தவிர பழைய அரங்கநாதர் கோயில்... கொஞ்சம் தூரம் தள்ளி புதிய அரங்கநாதர் திருக்கோயில் உள்ளது.. அவரையும் சேவித்து விட்டு தங்குமிடம் சென்றோம்..

அங்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு... அங்கு தயாரான சுடச்சுட உணவு சாப்பிட்டு விட்டு புறப்பட்டோம்

உதய்ப்பூர் க்கு..😄😄😄

🌹இரவு 9.00 மணிக்கு உதய்ப்பூர் சென்றடைந்தோம் . முன்பே புக் செய்து வைத்திருந்த ஹோட்டல் மதுரை மற்றும் ஹோட்டல் கிரிராஜ் பேலஸ் ஹோட்டலில்  எங்களை தங்க வைத்தார்கள்.. மிகவும் அருமையான stay. இரவு நன்றாக ரெஸ்ட் எடுத்துகொண்டோம்.

🌹மறுநாள் 13.11.2022 காலை காபி கொடுத்துவிட்டு ரெடி ஆக சொன்னார்கள். காலை 6.30 க்கு அனைவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது எங்கள் பேருந்துகள் 😄

🙏அங்கிருந்து சுமார் 35 km தூரத்தில் உள்ள கன்கரோலி என்ற இடத்தில் அமைந்திருந்த ஸ்ரீ மதுரா நாதர் மற்றும் லட்டு கோபால் ஸ்ரீ கிருஷ்ண பகவானை சேவித்தோம்.

காலை 9.15 வாக்கில் கோயில் திறக்கப்பட்டதால்.. பகவான் சிந்தனை யுடன் சிறிது நேரம் கோயிலின் உள்ளே அமர்ந்து இருந்து பின்பு சேவித்தோம்.. மிகவும் அழகு அந்த கோபால் 🙏ஆனந்தம் 🙏

🌺🌺 அடுத்து அங்கிருந்து சேவிக்க புறப்பட்ட இடம் ஸ்ரீநாத் துவாரகா... நல்ல கூட்டம்.. கொள்ளை அழகு ஸ்ரீ கிருஷ்ணா. ஸ்ரீ நாத் ஜீ. .

🌺 காண கண் கோடி வேண்டும்.. வட இந்திய பாரம்பர்ய முறை யில் அலங்காரம்.. பார்க்கவே ரிச் ஆக இருந்தது.. விட்டு வர மனம் வரவில்லை.

 🙏 பின்பு குழந்தை கோபால் சேவித்து புறப்பட்டோம் தங்குமிடத்திற்கு.

😄 மாலை.. ஹோட்டலில் இருந்து 5/6 பேர் ஒரு ஆட்டோவில் கணக்காக புறப்பட்டு லோக்கல் உதய்பூர் side seeing. The famous பேலஸ், Boating... water lighting பார்க்... ஷாப்பிங் area எல்லாம் சென்று வந்தோம்.. எப்போதும் கோயிலுக்கே சென்று சேவித்து வந்த எங்களுக்கு ஒரு ரிலாக்ஸ் கொடுத்தார்கள்... 😄

இரவு தங்குமிடம் வந்து... இரவு உணவு முடித்து.. நன்றாக ரெஸ்ட் எடுத்துகொண்டோம்...

மறுநாள்....

பதிவு நீளமாக போவதால் 2/3 ஆக பிரித்து போடுகிறேன் 🙏

.                                        இன்னும் வரும்..... 🙏. 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

அன்புடன் 🙏

படித்தமைக்கு மிக்க நன்றி 🙏

வெங்கட்ராமன் நாகராஜன் 🌹🙏

No comments:

Post a Comment