ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி - கழுகுமலை!
மிகவும் அமானுஷ்ய அதிசயம் நிறைந்த அற்புதமான ஜீவசமாதி!
பௌர்ணமி அன்று நேரில் சென்று தரிசனம் செய்யும் போது தான் ஜீவசமாதியின் மகிமையும் அங்குள்ள ஆற்றலும் நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பதை உணரமுடியும்.
கழுகுமலை ஸ்ரீமிளகாய் சித்தர் பரதேசி சுவாமிகள் ஜீவசமாதியின் வரலாற்று சுருக்கம்.
கழுகுமலையில் வாழ்ந்து. சித்தியடைந்த ஸ்ரீமிளகாய்ப்பழசித்தர்
450 வருடத்திற்கு முன்பு ஜீவசமாதி அடைந்தவர்.
புரட்டாசி அமாவாசை அன்று அவரது குருபூஜை இங்கு கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமிளகாய்ப்பழ சித்தர் வாழ்வில் 450 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்
அப்போது இராஜபாளையதில் வாழ்ந்து வந்துள்ளார்கள்
இதில் பெரியவர்கள் மூன்று கிழவன் அதில் கடைசி கிழவன் மிளகாய்பரதேசி ஆவார்.
இவருக்கு 3 வயது இருக்கும்போது ஓரு அமாவாசை அன்று இரவுநேரத்தில் அந்த காலத்தில் இராஜபாளையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பருத்தி ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டியில் ஏறி இவர் படுத்து தூங்கிவிட்டர்.
அந்த மாட்டுவண்டியானது திருவனந்தபுரம் சென்று சேர்ந்த பிறகு வண்டியில் தூங்கி கொண்டிருந்த மிளகாய்பரதேசியை மாட்டுவண்டிகாரர் பார்த்து தம்பி யாரப்பா நீ ?என கேட்டு கீழே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
புது இடத்தில் யாரும் தெரிந்தவர்கள் இல்லாததால் மிளகாய்பரதேசி பயத்தில் அழ ஆரம்பித்துள்ளார்.
மிளகாய்பரதேசி அழுது கொண்டிருப்பதை பார்த்த அருகில் இருந்த ஒரு பெரியமந்தரவாதி தம்பி இங்கே வா,உன் பெயர் என்ன? என்று கேட்டுள்ளார்.
என் பெயர் மிளகாய்பரதேசி என சொல்லி உள்ளார்.
அவரை அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார்.
3முதல் 8 வயது வரை மிளகாய்பரதேசிக்கு மந்திர ரகசியங்களையும்
மற்றும் கூடுவிட்டு கூடுபாயும் மந்திரவித்தைகளையும் மலையாள மந்திரீக வித்தைகளை கற்று கொடுத்தார் அந்த மந்தரவாதி.
அந்த மந்தரவாதிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சிஷ்யனாக மிளகாய்பரதேசி செய்துவந்துள்ளார்.
மந்தரவாதியிடம் சகல வித்தைகளையும் கற்று முடித்த பின்பு மந்திரவாதியிடம் சொல்லி கொண்டு மிளகாய்பரதேசி ஊருக்கு சென்று சொந்தங்களை பார்க்கலாம் என இராஜபாளையம் புறப்பட்டார்.
மந்திரவாதியிடமிருந்து ஏடு மற்றும் காளியம்மன் தெய்வங்களையும் எடுத்து கொண்டு வந்தார்.
இராஜபாளையத்திற்கு வந்து சொந்தங்களை பார்த்து கதறி அழுதார்.
( சில சம்பவங்கள் நடந்து முடிந்த பின் ) மிளகாய்பரதேசி அவர்கள் மாசி அம்மாவாசையின் போது தனக்கு சதுர குழி தோண்டி அதுலே மந்திர ஏடுகள் மற்று திருநீர் போன்றவைகளை உள்ளே வைத்து தான் ஜீவசமாதியாக அடங்கிய பின்பு சமாதியின் மேல் பாவுகற்களை வைத்து மூடிவிட்டு திரும்பிபாக்காமல் போய் விடுமாறும், அந்தபக்கமே வந்துராதீங்க எனவும் சொல்லியுள்ளார்.
அவர் மூத்தகிழவனிடம் காரம்பசுமாடு, இரண்டுவேல்,ஒரு வெள்ளிவேல் பிரம்பு மற்றும் குடையில் நொண்டிகாளியம்மன் ஆகியவற்றை கொடுத்து இந்த தெய்வங்களையும் வைத்து கும்பிடுங்கள் என சொல்லி இனிமேல் இந்த பக்கமே வந்துராதீங்க என மிளகாய்பரதேசி கூறினார்.
ஜீவசமாதியின் முகப்பு வாசலில்,பூவரசம் பூ மரமும்,சமாதி அருகில் வானைத் தொடும் அளவு உயரமான வேப்பமரமும் வேப்பமர நிழலில் கல் மண்டபமும் அமைந்துள்ளது.
இன்றும் இந்த மண்டபத்தில் மிளகாய் சித்தர் வந்து அமர்வதையும் அதன் பக்கத்தில் நடந்து போவதையும் பார்த்ததாய் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொல்கிறார்கள்.
இங்கு 85 வயது மதிக்க தக்க பாட்டி அவர்கள் பூஜைகள் செய்து வருகிறார்கள்
அது மட்டும் இல்லாமல் கழுகுமலையை பௌர்ணமியன்று கிரிவலம் வரும் அடியார்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்
இந்த 85 வயதிலும் இங்கு வருபவர்களை பணிவு மற்றும் அன்புடன் உபசரிக்கின்றார்கள்
எவ்வளவு தான் பணம் செலவு செய்து five star ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் இது போன்ற அன்பு கலந்த உபசரிப்பு கிடைக்காது.
ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகளின் வாரிசு வரிசையில் இவர் 8வது தலைமுறை சேர்ந்தவர்.
இப்போதும் ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் இங்கு தேகத்துடன் உள்ளார்கள் என்பதற்கு இவரே சாட்சி.
சுவாமிகளுடன் நேரடியாக பேசவும் தேவையானதை மக்களுக்கு பெற்று தருவதும் இவர்தான்.
மிளகாய்ப் பழ சித்தர் கழுகுமலைப் பகுதியில் வாழ்ந்து இருக்கிறார் .
அவருடைய உணவு மிளகாய்ப் பழங்கள் மட்டும் தானாம்.
தினம் காடுகளில் மலைகளில் சுற்றி வருவாராம்.மிளகாய்ப் பழம் சாப்பிட்டு விட்டு தவத்தில் அமர்ந்து இருப்பாராம்.
சிறுவயதில் வீட்டில் மிளகாய்ப் பழம் சாப்பிடுவாராம்.
சித்தரின் பெற்றோர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறாய் என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். அது முதல், மலைதான் அவரின் வீடாய் மாறி விட்டது.
மிளகாய் பழம் மற்றும் மிளகாய் வற்றல்களே இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது..
அதையே நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
இவ்வாலயத்தில் மிளகாய் பழம் பிரசாதமாக வழங்கப் படுகிறது.
இந்த மிளகாய் பழத்தினை ஒரு சொம்பு தண்ணீரில் போட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.
மறுநாள் அந்த பழத்தினை எடுத்து விட்டு அந்த தண்ணீரினை வீட்டில் உள்ள அனைவரும் பருக வேண்டும்.
பின் மீண்டும் அந்த சொம்பில் தண்ணீர் விட்டு அந்த மிளகாய் பழத்தினை அதில் போட்டு பூஜையில் வைக்க வேண்டும்.
இவ்விதமாக மூன்று நாட்கள் நாட்கள் செய்ய வேண்டும்.
மூன்றாம் நாள் அந்த மிளகாயினை நமது சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் நமது நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.
இந்த ஜீவ சமாதிக்கு மிளகாய் பழத்தினை காணிக்கையாகக் கொண்டு சென்று சமர்ப்பிக்கும் வழக்கமும் உள்ளது.
இந்த ஜீவசமாதியில் மிகவும் சமீபத்தில் நடந்த ஒரு அதிசய நிகழ்வு பற்றி இந்த பாட்டி சொன்ன தகவல்.
கோவில்பட்டியை சேர்ந்த நோய்வாய்பட்ட அன்பர் ஒருவர் சுவாமி சமாதி தரிசனத்திற்கு வந்துள்ளார்
அப்போது சமாதி பீடத்தில் இருந்து ஒரு குரல் அவரை பெயர் சொல்லி அழைத்தது அவரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அந்த வினாடி முதல் அவரை ஆட்கொண்ட நோய் நீங்கி புது பிறவி எடுத்து சென்றது போல் அவர் உணர்ந்துள்ளார் ...
இது போல் பல அதிசயங்களை சுவாமிகள் நிகழ்த்தி உள்ளார் என இந்த பாட்டி சாட்சியாக இருந்து சொல்கிறார்.
திருமணமாகி சுமார் 20 ஆண்டுகளாக குழந்தை செல்வம் இல்லாமல் தவித்து வந்த தம்பதிகள் இங்கு வந்து சுவாமிகளிடம் பிரார்த்திக்க அடுத்த வருடம் அவர்கள் தன் குழந்தை செல்வத்துடன் வந்து இங்கு சுவாமிகளை வழிபட்டு சென்றதாக இந்த பாட்டி கூறுகின்றார்.
சித்தர் மேல் உண்மையான பக்தி நம்பிக்கையுடன் இங்கு வருபவர்களின் கண்களுக்கு இன்னும் சுவாமி காட்சி தருகிறார் என்கிறார்கள்.
கடுமையானநோய் உற்ற போது மிளகாயொன்றை எடுத்து சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு விபூதியை பூசிக் கொண்டு மிளகாயை தண்ணீரில் போட்டு விட்டு பின் மறுநாள் சித்தரை மனதில் நினைத்து நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குடித்தால் நோய் குண்மாகும் என்று சொல்கிறார்கள்.
உங்கள் வேண்டுதல்களை சொல்லிச் செல்லுங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் ஸ்ரீமிளகாய்ப்பழ சித்தர்.
அடுத்தமுறை வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு மகிழ்ச்சியாக வந்து வணங்கி செல்லுங்கள் என்கிறார்கள்.
பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை வைத்து தான் இங்கு பூஜை அன்னாதனம் நடைபெறுகிறது.
தற்போது சமாதி பீடம் கட்டிடம் சரியான நிலையில் இல்லை.
பராமரிப்பு செலவிற்காக கூட இந்த பாட்டி யாரிடமும் கேட்பதில்லை
திருமணம் வரம் வேண்டுவோர் ஒரு ரோஜா மாலையை இங்கு சுவாமிக்கு சாற்றி விளக்கேற்றி வழிபட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
குழந்தை செல்வம் இல்லாதவர்கள் எலுமிச்சை பழம் வாங்கி கொண்டு இங்கு வந்து சமாதி பீடத்தில் வைத்து வழிபட்டு அத்துடன் சுவாமிக்கு நிவேதனம் செய்த மிளகாய் வற்றல்களை சேர்த்து எலுமிச்சை சாதம் செய்து அதில் இந்த மிளகாய் வற்றல்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை.
இந்த பதிவை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு என்னுடை தாழ்மையான வேண்டுகோள் நீங்களும் இங்கு சென்று மகானை சேவித்து உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு முறை ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதிக்கு சென்று தரிசனம் செய்யுங்கள் நோய்.நோடியின்றி உங்கள் குறைகள் எல்லாம் தீர்ந்து ஆனந்தமாக வாழுங்கள்
முகவரி;
No comments:
Post a Comment