திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ஜித சேவா கரண்ட் புக்கிங் செய்வதற்கான நடைமுறைகள்
அர்ஜித சேவா என்பது திருமலையில் தினந்தோறும் நடைபெறும் சுப்ரபாதம் தோமாலா நேத்திர தரிசனம் போன்ற சிறப்பு தரிசனங்கள் ஆகும்
1. பக்தர்கள் கரண்ட் புக்கிங் அதாவது அரிஜித சேவா நடப்பு சேவை புக் செய்வதற்கு காலை 11 மணிக்கு மேல் 5 மணிக்குள் தங்களது ஆதார் கார்டுடன் பதிவு செய்து கொள்ளலாம்
2 முன்பதிவு செய்யும்போது இரண்டு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படும் ஒன்று பக்தர்களுக்கு மற்றொன்று திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கானது பக்தர்களுக்கு வழங்கப்படும் முன்பதிவு சீட்டில் அவருடைய பெயர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தொலைபேசி எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.
3 பதிவு செய்யப்பட்ட அர்ஜித சேவாக்கு கணினி மூலம் மாலை 6 மணிக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் விவரம் அர்ஜித சேவா கவுண்டர் முன்பு உள்ள பெரிய எல்ஈடி திரையில் உடனடியாக வெளியிடப்படும்
4. அர்ஜித சேவாவிற்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேவையின் விவரம் மற்றும் அதற்கான தொகை ஆகியவற்றை உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் இரவு 11 மணிக்குள் அதற்கான கட்டணத்தை அருஜித சேவா கவுண்டரில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கான சேவையை பெற்றுக் கொள்ளலாம் அவ்வாறு செலுத்த தவறிய பக்தர்களுக்கு அவர்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ள சேவை ரத்து செய்யப்படும்.
5. ஒரு பக்தர் குலுக்கள் முறையில் அர்ஜித சேவாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மீண்டும் ஆறு மாதம் கழித்து தான் அவர் குழுக்களில் கலந்து கொள்ள முடியும்.
6. பக்தர்கள் ஒரு நேரத்தில் ஒரு அர்ஜித சேவாவிற்கு தான் அனுமதிக்கப் படுவார்கள்.
7. அர்ஜித சேவா முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் தேவை.
8. அர்ஜித் சேவா முன்பதிவு செய்வதற்கு ஒரிஜினல் அடையாள அட்டை வைத்திருத்தல் மிக அவசியம்.
9. புதிதாக திருமணம் ஆன ஜோடிகளுக்கு திருமலையில் நடைபெறும் கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் இந்த சேவையைப் பெற திருமண பத்திரிக்கை மற்றும் மாப்பிள்ளை பெண் ஆகிய இருவர்களுக்கும் ஒரிஜினல் ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் இந்த சேவையை பெற திருமணமான ஏழு நாட்களுக்குள் இருக்க வேண்டும். Mk. 17.12.22.
No comments:
Post a Comment