*மாமியின் கைவண்ணத்தில்*
GL
இரவு தோசைக்கு தொட்டுக்க என்ன வைக்கலாம் என்று யோசித்த போது நிறைய மல்லி தழைகள் இருப்பது ஞாபகத்திற்கு வந்துச்சு..
கொஞ்சம் மல்லி,இரண்டு தக்காளி ,பூண்டு 4 இதழ் ,பச்ச மிளகாய் 4
உப்பு ..இவைகளை மிக்சியில் நல்லா சட்னி போல அரைத்து எடுத்தாச்சு..
( மல்லி தழைகளையும்,தக்காளியையும் கழுவி பின் அரைக்கனும் )
அடுப்பிலே ஒரு கடாயை வைத்து ந.எண்ணெய் ஊற்றி கடுகு ,உ.ப தாளித்து பின் அரைத்த மல்லியை நீர் விட்டு கொட்டி கிண்டுங்க
உங்களுக்கு வேண்டிய அளவில் gravy ஆகவோ சட்னியாகவோ ..எண்ணெய் தெளிய இறக்குங்க. GL
No comments:
Post a Comment