Thursday, December 15, 2022

வண்டிக்காரன் செட்னி

 வண்டிக்காரன் செட்னி : 

செய்முறை. தேவையான பொருட்கள்: இரண்டு முற்றிய தேங்காய் உடைத்து சிறியதாக துறுவி வைத்து கொள்ளவும்.புளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு உப்பு அதற்கேற்ப ஒரு கிண்ணத்தில் போட்டு ஊறவைத்து கொள்ளவும்.தண்ணீர் குறைச்சலாக புளி உப்பு நனையும் அளவு ,  காய்ந்த மிளகாயை காம்பு கிள்ளி வைத்து கொள்ளவும் 7 மிளகாய், பெருங்காயம் சிறிதளவு, , மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் நிறைய ஊற்றி  கடுகு, சிறிது மற்றும் மஞ்சள் தூள்  சிறிது போட்டு கடுகு பொரிந்தவுடன் அரைத்த சட்னியை வாணலியில் போட்டு நண்கு வதக்கவும், சொய்ங் சத்தம் அடங்கும் வரை , தண்ணீர் ஊற்றாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும், புளி காய்ச்சல் கலர் வரும் வரை , மற்றும் எண்ணெய் மேலே சிறிது வரும் வரை வதக்கவும், . அடுப்பு மிதமான சூட்டில் வைத்து வதக்க வேண்டும், 5 நாட்கள் கேரண்டி. மற்றொரு வாணலியில் எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு நிலக்கடலைக்கொட்டை போட்டு கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.சாதம் ஆறவைத்து விட்டு புளிக்காய்ச்சல் வதக்கி வைத்த சட்னியை சாதத்துடன் நண்கு கலக்கி விட்டு ஒவ்வொரு முறையும் தாளித்து வைத்த தாளிப்பை மேலாக கலந்து கொண்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்... தாளிப்பு தனியாகத்தான் கலக்க வேண்டும். வண்டிக்கு செல்லும் போது கட்டு சோற்றுக்கு நண்றாக இருக்கும்.

No comments:

Post a Comment