Friday, December 16, 2022

தயிர்காரிகள்

 # சண்டே ஸ்பெஷல் -):மறைந்து போன ,மறக்க முடியாதவை .”தயிர்காரிகள் “.      (பெயர்ச்சொல் -மரியாதைகுறைவான வார்த்தையாக கருதவேண்டாம் )

         தர்மபுரி பெரு நகரம் இல்லை ,அருகிலேயே நிறைய கிராமங்கள் காணப்படும் மாவட்ட தலைநகர்.45 வருடம் முன்பு இன்னமும் வளர்ச்சி அடையாத ஊரை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள் . 

     நான் எழுத போவது ஊரைப்பற்றி இல்லை, எங்கள் வீட்டிற்கு தினமும் தயிர் , மோர் ,நெய் கொண்டுவந்த திருமதி மருதாவைப்பற்றி தான் .

          8 மணியளவில் கூடையில் நிறைய “ தயிர்/மோர் விற்பனை செய்யும்  60 வயதை கடந்தவர்கள் வர ஆரம்பித்துவிடுவார்கள் . தேவைக்கு ஏற்ப மோர் வாங்குவார்கள் . எங்கள் வீட்டிற்கு வாடிக்கையாக திருமதி மருதா என்ற பெண்மணி மோர் விற்பனை செய்யவருவார் , மோர் போட்டுவிட்டு கணக்கிற்கு  சுவற்றில் ஒரு கோடு போட்டு விடுவார் .ஞாயிற்று கிழமை ஆனால் நல்ல மணத்துடன் முருங்கை கீரைப்போட்டு காய்ச்சிய நெய்க் கொண்டு வருவார் . சிறுவர்களிடத்தில் நெய்க்கசடை  வாங்க போட்டி இருக்கும் . அதில் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும் ,திருமதி மருதாவும் இல்லை ,அந்த கசடும் இல்லை ,கிராம புற  வெள்ளிந்தியான மக்களின் அன்பும் இப்பொழுது காணபடவில்லை , ஒரு இளநீர் ₹20 என்று கணக்குப்பார்க்க சொல்கிறது. தவறு அவர்களிடத்தில் இல்லை , உலகமே பொருளாதரத்தை வைத்து மக்களை எடைப்போடும் பொழுது அவர்களிடத்திலும் மாற்றம் இல்லாமலா இருக்கும் . 

         எங்கள் வீட்டிற்கே சைக்கிளில் பித்தளை மணிக்கட்டிக்கொண்டு  பால் கொண்டுவந்து போடுவார்கள் , நிறைய நண்பர்கள் காலை 4 மணிக்கே சந்தைப்பேட்டையில் உள்ள வேல்பால் டிப்போவிற்கே சென்று முதலில் வரும் பாலை வாங்க சென்றுவிடுவார்கள் . காலை5.30 மணியளவில் வேல்பால் டிப்போ பூத்களில் கூட்டம் மொய்க்கும் , காபி/டீ குடிக்கும் அவசரத்தில் எல்லோரும் முந்துவார்கள் .

      எங்கள் வீட்டில் உள்ள மிக பழமையான பொருள் (1925 வருடம் வாங்கியதாக இருக்கலாம்)உங்கள் பார்வைக்கு .

 

No comments:

Post a Comment