கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே!
அருள்மிகு ஸ்ரீ கொப்புடை நாயகியம்மன் திருக்கோவில்.
ஆதிசங்கரர் இத்தலம் வந்து கொப்புடை அம்மனை வழிபட்டார் எனக் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் இந்த இடம் முழுவதும் காரை மரங்கள் அடர்ந்து செழித்த வனப்பகுதியாக இருந்த காரணத்தால் இவ்வூருக்கு "காரைக்குடி' எனப் பெயர் ஏற்பட்டது.
அம்பிகை தன் திருக்கோயிலில் ஸ்ரீ சக்கரத்தின் மீது கிழக்கு நோக்கி நின்ற நிலையில் ஜ்வாலை கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவத் திருமேனியில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல்கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் அருள் பாலிக்கிறாள். துர்க்கை அம்சத்துடன் விளங்கும் அம்பிகை, கல்வி, செல்வம், வீரம் என மூன்றையும் வாரி வழங்கும் வரப்பிரசாதியாய் விளங்குகிறாள். இந்த மூர்த்தமே உற்சவ மூர்த்தியாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இத் திருத்தலத்தில் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
*காரைக்குடி.*
*சிவகங்கை மாவட்டம்.*
No comments:
Post a Comment