ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் குரலாட்டமாவே இருந்தது|
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் மேல் அபார பக்தி கொண்டவராம்
ஸ்ரீ கௌரிசங்கர் ஒரு அபூர்வமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்
ஒருமுறை தன் தாயாருடன் கல்கத்தாவிலிருந்து ஸ்ரீ மஹா பெரியவாளை தரிசிக்க வந்தார்
பூனாவில் தன் சகோதரன் மோசமான உடல்நிலையில் இருக்க அதற்காக ஸ்ரீவைத்தியநாதராம் பெரியவாளின் அனுக்ரஹம் பெற இவர் விழைந்திருக்க தாயாரோ" நான் எங்கேயும் வரலைடா ரமண பகவானையும் சேஷாத்ரி சுவாமிகளையும் வேண்டிக்கிறேன்டா"
என்று ஸ்ரீ மஹாபெரியவாளை தரிசிப்பதை தவிர்க்கும் மனநிலையோடு இருந்தார்
ஓரிக்கை வந்தபோது 'நான் இங்கேயே இருக்கேன் நீ போய் பெரியவாளை பாத்துட்டு வா என்று தன் உறுதியான பக்தியால் வேறொரு மகானை ஏற்க மனமில்லாதவளாய் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டாள்
" என்னம்மா இந்த தெய்வத்தை தரிசிக்க மாட்டோமான்னு அத்தனை பேரு வர்றா
நீ இப்படி பேசறயே" என்று தாயாரிடம் தன் வருத்தத்தை தெரிவித்தவராய் இவர் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க சென்றார்
தன் சகோதரனின் உடல்நிலையைப் பற்றி பெரியவாளிடம் எடுத்துச் சொல்லி ஆசி பெற்றார் அப்போது ஸ்ரீபெரியவா இவரிடம் "உன்னோட யார் வந்திருக்கா? என்று கேட்டுவிட்டு எழுந்துக் கொண்டார்
எல்லாமும் அறிந்த தெய்வமாய் பெரியவா தூரத்தில் இருந்த அந்த மரத்தடியை நோக்கி நடக்கலானார்
ஸ்ரீ கெளரிசங்கர் வியப்புடன் பின்னால் சென்றார் விருவிருவென மகான் நடக்க அவர் தரித்திருந்த காவி வஸ்திரம் நழுவியது அதை அப்படியே கொசுவி தன் தோளில் போட்டுக்கொண்டு வெறும் கௌபீனம் மட்டும் கட்டியபடி அந்த தாயாரிடம் சென்றார்
தான் தரிசிக்க விருப்பபடாதபோது இப்படி ஒரு காருண்யர் வலியதன் அருகில் வந்து காட்சியளிக்க அம்மையார் நெகிழ்ந்து போனாள் விக்கித்த நின்ற அம்மையாரிடம் "உன் மாதா மகர்பூர்வீகம் என்ன?" என்றும்." சேஷாத்ரி சுவாமிகளை நீ பார்த்திருக்க யோ?" என்றும் ஸ்ரீபெரியவா கேட்டு நான் எல்லாமும் அறிவேன் என்பதை உணர்த்தினார் ஸ்தம்பித்து நமஸ்கரித்துவிட்டு அம்மையார் பதில் கூறினாள்
பின் ஸ்ரீபெரியவா அகன்றதும் தன் மகனிடம் "பெரியவா கௌபீனத்தோட நடந்து வர்றதை பார்த்தபோது அப்படி யே சாஷாத் ரமண பகவான் வர்றா மாதிரியே இருந்ததுடா " என்று சொல்லிவிட்டு மேலும் ஆச்சர்யத்துடன் "பெரியவா பேசி நான் கேட்டதில்லே இப்போ கேட்டபோது அது அசல் சேஷாத்ரி சுவாமி குரலாட்டமாதான் இருந்தது
ஒரே சமயம் ரமணராகவும், சேஷாத்ரி சுவாமிகளாகவும் எனக்கு பெரியவா தரிசனம் கொடுத்துட்டா நான் அசடாட்டம் தரிசனம் செய்ய வரமாட்டேன்னு சொன்னது மகா குத்தம்னு தோன்றது
எனக்காகவே இப்படி வலிய வந்து நானே எல்லாமும்னு பெரியவா உணர்த்திட்டு போயிட்டா" என்று அம்மையார் நெகிழ்வுற்றாள்.
No comments:
Post a Comment