Wednesday, December 7, 2022

வெங்காயம் தக்காளி சட்னி

 *சமையல் குறிப்புகள்*

              🌷🌷🌷

*பத்தே நிமிஷத்துல வெங்காயம் தக்காளியை வைச்சு இட்லி, தோசைக்கு சூப்பரா ஒரு சட்னி ரெடி பண்ணிடலாம்*

             🌺🌺🌺

அவரச நேரத்துக்கு இந்த சட்னி சட்டுனு கை குடுக்கும் தெரிஞ்சி வைச்சுக்கோங்க.

காலையில் எழுந்து அவசர அவசரமாக சமைக்கும் நேரத்தில் நாம ஒரு குழம்பு வைக்க நினைத்திருப்போம், ஆனால் அதற்கான காய்கறிகள் அந்த நேரத்தில் இருக்காது வாங்கி வைக்கவும் மறந்து இருப்போம். இது போல காலை டென்ஷனை சமாளிக்க வீட்டில் காய்கறி இல்லை என்றாலும் கூட சட்டுனு இந்த ஒரு சட்டினியை செஞ்சுருங்க. இது இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சைடிஷ் ஆக இருக்கும் மதியம் வெரைட்டி ரைஸ் செய்தால் அதற்கும் இதை சைடிஷ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்

 அது என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 இந்த சட்னி தயார் செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நான்கு பெரிய வெங்காயத்தை பெரிதாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளுங்கள்.

அத்துடன் 20 பல் உரித்த பூண்டையும் சேர்த்து இத்துடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்த பிறகு 4 பச்சை மிளகாய் 3, காய்ந்த மிளகாய், இவை அனைத்தையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்குங்கள்,

அதன் பிறகு மூன்று தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி அதையும் சேர்த்த பிறகு, ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி இரண்டையும் சேர்த்த பிறகு ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியும் சேர்த்து அனைத்தையும் ஒரு முறை நன்றாக கலந்து வதங்கி விடுங்கள். -

இவை எல்லாம் நன்றாக வதங்கி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். வதக்கிய பொருள்கள் அனைத்தும் நன்றாக ஆறியவுடன் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு ஒரு சுற்று விட்டு எடுங்கள், அதன் பிறகு ஒரு கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலுக்கு மாற்றிய பிறகு ஒரு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பிறகு கொஞ்சம் கருவேப்பிலை ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயமும் சேர்த்து இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி விட்டால் போதும்.

சாதம் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஆன பக்கா சைடு டிஷ் தயார்.

இதை வெரைட்டி ரைஸ்க்கு சைடிஷ் ஆக கொடுப்பது என்றால் தண்ணீர் லேசாக தெளித்து துவையல் போல வைத்து கொள்ளலாம்.

இட்லி தோசை போன்றவைக்கு இது போல கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். எப்படி அரைத்தாலும் இதன் சுவை அருமையாக இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முறை வதக்கி அரைக்க வேண்டியது தான் அதிக நேரமும் எடுக்காது.

இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

🌺🌺🌺🌺

No comments:

Post a Comment