*பல்கூச்சம் நீங்க*
கண்டங்கத்தரி விதை – 100 கிராம்
தாளிசபத்திரி - 100 கிராம்
கொய்யா இலை - 100 கிராம்
ஆலம்பட்டை - 100 கிராம்
அரசம்பட்டை - 100 கிராம்
வாய்விடங்கம் - 100 கிராம்
கொட்டைப்பாக்கு - 100 கிராம்
காவிக்கல் – 10 கிராம்
பச்சைக் கற்பூரம் – 10 கிராம்
இந்துப்பு – 10 கிராம்
ஆகியவற்றை எடுத்து ஒன்றாகத் தூள் செய்து நன்கு கலந்து பத்திரப்படுத்தவும். இதைக் கொண்டு பல் துலக்கிவர பல்வலி, பல்கூச்சம், ஈறு அரிப்பு, ஈறுகளில் உண்டாகும் புண் போன்றவை குணமாகும்.
மூட்டு, முழங்கால் வலிகளுக்கு
வேப்ப எண்ணெய்
விளக்கெண்ணெய்
இலுப்ப எண்ணெய்
புங்க எண்ணெய்
கடுகு எண்ணெய்
தலா 100 மில்லி வாங்கி வந்து கலந்து கொண்டு, கூடுதலாக பச்சை கற்பூரம் 20கிராம் சேர்த்து காய்ச்சி இறக்கவும்...
(கடுகு எண்ணெய் குறிப்பிட்ட இடத்திற்கு அதிக சூடு கொடுக்கவும் மற்றும் இரத்த நாளங்களை விரிவடைய வைப்பதற்காகவும் சேர்க்கப்படுகிறது...)
No comments:
Post a Comment