*சமையல்.*
உமா
தக்காளி சட்னி.
தேவையான பொருள்கள் -
தக்காளி -1 கப்
வெங்காயம் - 1கப்
மிளகாய் வத்தல் - 2
பூண்டு பற்கள் - 4
தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை -
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை நன்கு சுருள வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் வதக்கிய வெங்காயம், தக்காளி, வத்தல், பூண்டு, தேங்காய் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்தைவையுடன் சேர்க்கவும். சட்னி ரெடி. இதை தோசை/ இட்லி/ சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
குறிப்புகள் -
பெரிய வெங்காயத்துக்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment