🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
*#அருள்மிகு_நீலவண்ணப்_பெருமாள் #திருக்கோயில்_நன்மங்கலம்_சென்னை*
🍒*திருவிழா* பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம், வருடத்தின் முக்கிய விஷேசங்கள் நடைபெறும்.
🔥தல சிறப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி_ஆலய அபிமானத்தை தலமாகவும் இது விளங்குகிறது.
🔥*பொது தகவல்*
கோயில் பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், சடகோபர், சுதர்சனர் அருள்பாலிக்கிறார்கள். சென்னையில் கோயில்கள் நிறைந்த நங்கநல்லூர் பகுதியும் இப்பகுதியும் அருகிலேயே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழ்க்கட்டளையில் சில புராதனக் கோயில்களும் மேடவாக்கத்தில் புகழ்பெற்ற தேனுபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது சிறப்பு.
🔥 பிரார்த்தனை நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
🔥நேர்த்திக்கடன் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் மற்றும் துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை
🔥காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோயிலுக்கருகில் பச்சைவண்ணர்-பவளவண்ணர் திருக்கோயில்கள் அமைந்திருப்பதைப் போல, இங்கும் காமாட்சியம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கருகில் நீலவண்ணப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது சிறப்பாகும்.
🍒கண்ணன் குழலினை நண்ணும் மனமுடையவரான நம்மாழ்வாருக்கு இத்திருக்கோயிலில் மூலவர் மற்றும் அர்ச்சா விக்ரகம் அமைந்துள்ளதும்;
🍒108 திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் புகழ்பெற்ற திருநீர்மலை_ரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலின் ஓர் அங்கமாக இத்திருக்கோயில் விளங்குவதும் இத்தலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களாகும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய அபிமானத் தலமாகவும் இது விளங்குகிறது.
2010 ல் சத்யநாராயணஸ்வாமி,🔥 சக்கரத்தாழ்வார், வேதவல்லித் தாயார் சன்னிதிகள் அமைக்கப்பட்டன. தற்போது 2013 ஜூலை பக்த ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு சம்ப்ரோஷணம் நடந்தேறியது கேட்பாரற்றுக் கிடந்த கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்குக் காரணம் நீலவண்ணப்\பெருமாள்தான் என்றால் மிகையாகாது.
தலவரலாறு
🔥இவ்வாலயம் சுமார் 800 வருடங்கள் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. கோயிலின் தளத்தில் மீன் வடிவங்கள் அமைந்துள்ளதிலிருந்து இதை உணரலாம். சில கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
🔥வைணவ சமுதாயத்தின் ஒரு பிரிவினரான அரசானி பாலையைச் சார்ந்த தாத்தாச்சாரியர் பரம்பரையினர் சிலர் இக்கோயிலுக்கருகில் சிறிது காலத்துக்குமுன் வசித்துவந்தார்கள் என்றும்;
🔥இத்திருக்கோயிலுக்குக் கைங்கர்யம் செய்தார்கள் என்றும் அரசாங்கக் குறிப்பேடுகளில் நன்மங்கலம் நீர்வணப் பெருமாள் என்று இந்தப் பெருமாள் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
No comments:
Post a Comment