எப்படி தெரிந்தது ?
--------------------------
ராகவன் பைக் வைத்திருந்தான்.ஆபீசுக்கு 'கேப்' ( கார்) வந்து அழைத்துப் போகும்..தினமும் தவறாமல் ஆபீசிலிருந்து வந்ததும் பைக்கில் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போய் வருவான்.
ராகவனின் மைத்துனன் சங்கர் கொஞ்சம் தள்ளி சிவாஜி நகரில் வசித்தான். கம்பியூட்டர் சயன்ஸில் டிக்ரி முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தான். வாரம் இருமுறையாவது அக்கா காயத்திரியின் வீட்டுக்கு மோபெட்டில் வருவான். ராகவனின் பைக் மேல் ஒரு கண் அவனுக்கும்.
ராகவன் ஆபீசுக்கு போயிருக்கையில்' சாவி குடு அக்கா... ஒரு இன்டர்வியூவுக்கு போயிட்டு வரேன். ' என்பான்
சில சமயம் பக்கத்து மார்க்கெட்டுக்கும் சில்லறை வேலைகளுக்கும் பைக்கில் போவான்.
' டேய் அவருக்கு இப்படி நீ வந்து பைக் எடுக்கிறது அவ்வளவா பிடிக்காதுடா.. அப்புறம் அவர் ஏதாவது சொல்லப்போயி உன் மனசு கஷ்டப்படும்...'' எனபாள் காயத்ரி.
'' அட போக்கா, ஐ டொன்ட் கேர்... அத்திம்பேர்தானே, அவர் என்னை திட்டினாலும் பரவாயில்லை. '' என்று சாவியை எடுத்துக்கொண்டு பைக்கில் போவான்.
சொல்வானே தவிர தான் வண்டியை எடுப்பது அத்திம்பேருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வான்.
வண்டி எங்கிருந்து எப்படி எடுத்தானோ அச்சு அசலாக அதே இடத்தில் அதே போல ஸ்டான்டு போட்டு லாக் செய்து நிறுத்துவான். தினமும் தான் உபயோகிக்கும் அளவு பெட்ரோல் போட்டு விடுவான்.
ஆனாலும் அவன் வரும் நாட்களில் கரெக்டாக காயத்திரியை ராகவன் கேட்பான்.
' உன் தம்பி வந்து வண்டியை எடுத்தானா?''
எப்படி அவனுக்கு தெரியுது என்று அக்காவும் தம்பியும் குழம்பினார்கள்.
ஸ்பீடா மீட்டர் ரொம்ப நாளாக வேலை செய்யவில்லை. அதனால் மைலேஜை வைத்து கண்டு பிடிக்க முடியாது.
தான் உபயோகிக்கும் அளவு பெட்ரோல் தினமும் போட்டுவிடுவதால் அதை வைத்து கண்டுபிடிக்க முடியாது.
இஞ்சின் சூடு ராகவன் வருவதற்குள் தணிந்துவிடும். அதுவும் ரூல்ட் அவுட்.
ராகவன் வைக்கும் அதே இடத்தில் வண்டியை வைத்துவிடுவதால் அதை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது.
பின் எப்படி ?
ஒரு நாள் கேட்டுவிட்டாள்' எப்படிங்க என் தம்பி வந்து பைக் எடுக்கிறான்னு கண்டுபிடிக்கறீங்க ?''
'' எல்லாம் கரெக்டா செய்யறான். ஆனா ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுடறான்''
'' அது என்னங்க ..சொல்லுங்களேன்''
'' ரியர் வியூ மிர்ரர். நான் அஞ்சு அடி 7 அங்குலம் உயரம். அவன் 5 அடிதான். அவனுக்கேற்ற மாதிரி மிரரை அட்ஜஸ்ட் செய்து ஓட்டறான். ஆனா திரும்பி வண்டியை வைக்கையில் மிரரை பழையபடி வைக்க மறந்துடறான். துப்பறியும் சினிமாக்களில் இந்த மாதிரி சின்ன விஷயங்களை வைத்துதான் ஹீரோ கண்டிபிடிப்பான்...'
( ஒரு சினிமாவில் கருணாஸின் ஆட்டோரிக்ஷா மிரரை அஜித் அட்ஜஸ்ட் செய்யும் காட்சியை பார்த்ததும் தோன்றிய ஐடியா இது )
by Raghothaman Rao
No comments:
Post a Comment