பரோட்டா : வீட்டிலேயே எப்படி செய்வது..?*
பரோட்டா கடைகளில் வாங்கும் பரோட்டா சுவையிலேயே வீட்டில் செய்வதும் சுலபம்தான். எப்படி செய்வது தெரியுமா..?
தேவையான பொருட்கள் :
மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையுங்கள். கெட்டிப் பதம் வரும் வரை தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளுங்கள்.
சப்பாத்தி போல் அல்லாமல் பரோட்டாவிற்கு நன்கு இழுத்து இழுத்து கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கு பிசைய வேண்டும். அப்போதுதான் பஞ்சுபோன்ற பரோட்டா கிடைக்கும்.
அடுத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பின் கிண்ணத்தில் வைத்து அதன் மேல் சுற்றிலும் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு துணி போட்டு மூடிவிடுங்கள்.
இந்த மாவு குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும். அதிக நேரம் ஊறினால் தான் பரோட்டா நன்கு வரும்.
ஊறியதும் ஹோட்டல் கடைகளில் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளாக எடுப்பார்கள். அதுபோல் உருண்டைகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் அந்த உருண்டைகள் மீது மீண்டும் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
ஊறியதும் அதிலிருந்து ஒரு உருண்டை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது வீட்டில் பெரிய தட்டு இருந்தால் அல்லது தரையிலேயே எண்ணெய் தடவி உருண்டையை பெரிய வட்டமாகத் தட்டுங்கள். உருண்டை மென்மையாக இருக்க வேண்டும்.
அடுத்து அதை அப்படியே லாவகமாக பிரித்து எடுத்து வட்டமாக சுருட்டிக் கொள்ளவும். பின் அதை அப்படியே வைத்து கையிலோ அல்லது பூரி கட்டையிலோ உருட்ட பரோட்டா பதத்தில் வந்திருக்கும். அதை தோசைக் கல்லில் போட்டு கொஞ்சம் எண்ணெய் விட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடுங்கள்.
சுட்டு எடுத்ததும் சூடாக இருக்கும்போதே அவற்றை அடுக்கி கடையில் சுற்றி தட்டுவதுபோல் கைகளால் பரோட்டாவை அடியுங்கள். தற்போது பார்த்தால் லேயர் லேயராக கடையில் வாங்குவதுபோல் பரோட்டா தயாராகி இருக்கும்.
இதற்கு பொருத்தமான சைட் டிஷ் வைத்து சாப்பிட்டலாம்.
No comments:
Post a Comment