நாவில் எச்சி ஊறவைக்கும் கல்யாண வீட்டு ஸ்டைலில் மாங்காய் ஊறுகாய்..எப்படி செய்து அசத்துவது தெரியுமா..?
.நீங்களும் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும், மாங்காய் ஊறுகாய் பிரியர் எனில் உங்களுக்கு இந்த சிம்பிள் டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்.
மாங்காய் ஊறுகாய் என்றாலே நாவூறும். மாங்காய் பயன்படுத்தி விதவிதமான மாங்காய் ஊறுகாய் செய்யலாம். ஆனால், கல்யாண வீடுகளில் செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் தனித்து ஒரு ருசி இருக்கும். இதற்கு அதிக நேரம் தேவைப்படாது ஒரு மணி நேரத்தில் தயார் செய்யப்பட்டு பரிமாறப்படும். சிலர் வெறுமனே சாப்பிடுவார்கள்.அப்படி நீங்களும் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும், மாங்காய் ஊறுகாய் பிரியர் எனில் உங்களுக்கு இந்த சிம்பிள் டிப்ஸ் இருக்கு...
தேவையான பொருட்கள்:
செய்முறை:
1. மாங்காயை தண்ணீரில் கழுவி சுத்தமாக ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர், மாங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். 30 கிராம் மிளகாயை வெயில் நேரத்தில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பிறகு ஒரு வாணலியில் 2 ஸ்பூன் கடுகு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1 1/2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். வெந்தயம் லேசான பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.
3. பின்னர் ஒரு மிக்ஸியில் காய வைத்துள்ள வர மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து அரைத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள்.
4. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அனைத்து விட வேண்டும்.
5. பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். அதனுடன் மிளகாய், உப்பு, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பின்பு நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவை கிளறி பிரட்டுங்கள்.
6. பின்னர் ஒரு ஸ்பூன் பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் நொடியில் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி..! அதனை உடனடியாக பரிமாறலாம். இல்லையென்றால் நாட்கள் கழித்தும் பரிமாறலாம்.
No comments:
Post a Comment