Wednesday, August 3, 2022

நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள்

 🫐நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள்🫐

🔴அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களும் பல இருக்கின்றன.

🔴பெரும்பாலும் எமன் வழிபட்ட சிவாலயங்களாக இருந்தால் அங்கு நவக்கிரகங்கள் இருக்க வாய்ப்பில்லை.

🛕சென்னை அடுத்துள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் இல்லை. ஏனென்றால் அது எமன் வந்து வழிபட்ட தலம்.a

🛕திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலிலும் நவக்கிரக சன்னிதி இல்லை.இங்கும் எமன் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

🛕ஸ்ரீ வாஞ்சியம்,ஸ்ரீ வாஞ்சியப்பர் கோவிலில் எமதர்மனுக்கு முக்கியத்துவம் உண்டு. எனவே இங்கும் நவக்கிரகங்கள் இல்லை.

🛕திருவாவடுதுறை ஆலயத்திலும் எமன் வழிபட்டு உள்ள காரணத்தால் நவக்கிரகங்கள் இடம் பெற வில்லை.

🛕திருப்பைஞ்சீலி,வாழை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சிவ தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவக்கிரகங்கள் கிடையாது.

🛕திருக்கடையூரில் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்.இங்கும் நவக்கிரகங்கள் இல்லை.

🛕திருவையாறுக்கு அருகே உள்ள திருமழப்பாடி திருத்தலத்திலும் நவக்கிரகம் இல்லை.

🙏🫐ௐ நமசிவாய🫐🙏

🙏🚩#அன்பே #சிவம்🚩🙏

No comments:

Post a Comment