பருப்பு தக்காளி அடை 😋
🍱தேவையானப் பொருட்கள் :
தக்காளி - 3,
பாசிப்பயறு - 100 கிராம்,
பச்சரிசி - 200 கிராம்,
புழுங்கலரிசி - 200 கிராம்,
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
சோம்பு - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
பட்டை,
கிராம்புத்தூள் - சிறிது.
பாசிப்பயறு - 100 கிராம்,
பச்சரிசி - 200 கிராம்,
புழுங்கலரிசி - 200 கிராம்,
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
சோம்பு - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
பட்டை,
கிராம்புத்தூள் - சிறிது.
🍴செய்முறை :
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பயறு அனைத்தையும் 3 மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் தேங்காய்த்துருவல், தக்காளி, காய்ந்தமிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்புத்தூள் சேர்த்து அரைத்து, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து அடை மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெயை ஊற்றி, இருபுறமும் நன்கு வெந்து மொறு மொறுவென்று வந்ததும் எடுக்கவும். தக்காளிச் சட்னி, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
🔥குறிப்பு: 🔥
தேங்காய்த்துருவலை அரைக்காமல் அப்படியே துருவிய தேங்காயை அடைமாவில் கலந்தும் அடை சுடலாம்
No comments:
Post a Comment