Wednesday, April 8, 2020

தரிசனம் எப்படி அமைய வேண்டும்.

தரிசனம் எப்படி அமைய வேண்டும்.!!!🙏
         
கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள்.

இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள். ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம்.

அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.

உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள். இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும்.

எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்துபார்த்துதரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு.

எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  திருக்கோட்டியூரில் வாழும் ஸ்ரீவைஷ்ணவர்களின் முக்கிய நோக்கம் ததீயாராதந விஷயத்தில் ஊன்றியிருந்தது என்பது பெரியாழ்வார், திருக்கோட்டியூர் விஷயமாக அருளிய திருமொழியிலிருந்து அறியலாம்.

      ஒரு சமயம் ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளாகக் கூடி, திருவனந்தபுரத்துக்கு யாத்ரை சென்றனர். வழியில், திருக்கோட்டியூரில் உள்ள செல்வநம்பி திருமாளிகைக்குச் சென்றார்கள்.  அப்பொழுது செல்வநம்பி வெளியூர் சென்றிருந்தார். அவர் தேவியார், "நாம் செய்த பாக்கியத்தால், ஸ்ரீவைஷ்ணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்" என்று உகப்பு கொண்டு, தம் திருமாளிகையிலிருந்த நூறு கோட்டை நெல்லைக் குத்தி அவர்கள் உகக்கும்படி அமுது செய்தருளப் பண்ணினார்.‌ மறுநாள், செல்வநம்பி வந்து சேர்ந்தார்.‌ தம் திருமாளிகையில் நெல்லில்லாதிருப்பதைக் கண்டு தன் தேவியரை நோக்கி, "நெல்லை என்ன செய்தாய்?" என்று கேட்டார்.‌ தேவியார் "#பரமபதத்திலேவிளைவதாகவித்தினேன்" என்றார். இது கேட்ட செல்வநம்பி மிகவும் ஆனந்தமடைந்தார்.

       இதனால், அடியவர்களை ஆராதிப்பதால் மறுமைப் பலனுண்டு என்பது தெரிய வருகிறது.

No comments:

Post a Comment