Wednesday, April 29, 2020

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில், மயிலாப்பூர்

இன்றைய கோபுர தரிசனம்...

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில், மயிலாப்பூர், சென்னை

உற்சவர் பெயர் அரவிந்தமாதவன், 

தலவிருட்சம் புன்னை மரம்

தீர்த்தம் சந்தான புஷ்கரணி

6-9 ஆம் நூற்றாண்டின் பன்னிரண்டு ஆழ்வார்களில், முதல் மூன்று இடங்களில் ஒருவரான பேயாழ்வாரின் பிறப்பிடமாக இந்த கோவில் கருதப்படுகிறது.

காலை 8 மணி முதல் பல்வேறு தினங்களில் தினசரி ஆறு கால பூஜைகள் நடக்கிறது. 

இந்து புராணத்தின் படி, பாற்கடலை கடைந்தபோது மகாலட்சுமி தோன்றினாள், பிருகு முனிவர் அவளை தன் மகளாக எடுத்து, அமிர்தவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார், மகளுக்கு திருமண வயது வந்ததும், எல்லாம் வல்ல நாராயணிடம் சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டினார். மகாவிஷ்ணு  மயிலாப்பூரில் இந்த இடத்தில் அமிர்தவல்லியை மணந்து கல்யாண திருக்கோலத்தில் மாதவ பெருமாளாக அருள்பாளிக்கிறார். 

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான மயிலாப்பூரில் உள்ள பகுதியில் இந்த கோவில்அமைந்துள்ளது. 

10 அடி (3.0 மீ) உயரமான சுவர்கள் சூழப்பட்ட செவ்வக  கோபுரத்தின் 5-அடுக்கு கோபுரத்தால் கட்டப்பட்டிருக்கிறது. 

இந்த கோவிலில் கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியுடன் சேர்ந்து அருள்பாளிக்கிறார்.

ஸ்ரீ பூவராஹருக்கு தனி சன்னதி உள்ளது, இவர் விஷ்ணுவின் அவதாரமாவார், 
இந்த சந்நிதி கோவிலின் பின்னால் அமைந்துள்ளது.

ஆண்டாள், ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

மாதவ பெருமாளை எதிர்கொண்டு வழிபடும் கருடனின் சந்நிதி கோயிலுக்கு அச்சாணியாக அமைந்துள்ளது. 

வழிபாட்டு மண்டபமும், குறுகிய அர்த மண்டபமும் இந்த கோவிலில் உள்ளது.  

அமிர்தவல்லி தாயார் சந்நிதி இரண்டாம் கட்டத்தில் கோயிலின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல், இரவு 8மணி வரை  வரை திறந்திருக்கும்.

இங்கு மூலவர் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு கல்யாண மாதவன் என்ற ஒரு பெயரும் உள்ளது. மூலவரின் விமானம் ஆனந்த நிலை என்று அழைக்கப்படுகிறது 

ஒருமுறை நாரதர் வேதவியாசரிடம் பூலோகத்தில் கலிதோஷம் இல்லாத இடம் எது என்று கேட்க, வேதவியாசர் இந்த இடத்தை காண்பித்தாராம்.

இங்குள்ள புஷ்கரணியில் ஒரு மாசிமகத்தன்று மகாலட்சுமி குழந்தையாக அவதரித்தாள், எனவே இந்த தீர்த்தம் சந்தான  புஷ்கரிணி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது தாயார் அவதரித்த அந்த நன்னாளில் எல்லா புண்ணிய நதிகளும் இந்த புஷ்கரணியில் சங்கமிக்கிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாசிமகத்தன்று இங்கு விழா நடக்கிறது

அன்று ஒருநாள் மட்டும் தாயார் சுவாமியுடன் இந்த தீர்த்த குளத்தில் ௭ழுந்து அருள்பாலிக்கிறார்கள்.

அப்போது தீர்த்த நீராடி பெருமாளையும், தாயாரையும் வணங்கினால் பாவம் நீங்கி புண்ணியம் பிறக்கும் என்பது நம்பிக்கை

திருமணத்தடை உள்ளவர்கள் தாயாருக்கு கல்கண்டு குங்குமப்பூ பால் இவை மூன்றும் சேர்ந்த கலவையை நைவேத்தியமாக வைத்து வழிபடுகின்றனர் இதனால் திருமணத்தடை அகன்று திருமணம் உடனடியாக நிறைவேறுகிறது

ஸ்ரீ ராமானுஜர் அவர்கள் பெருமாளை தரிசிக்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார், அப்பொழுது கர்நாடகத்தில் திருநாராயணபுரத்தில் அவர் சென்றபோது அங்கு உற்சவமூர்த்தி சம்பத்குமாரர் இல்லை, என்ன என்று விசாரித்தபோது டெல்லியை ஆண்ட மன்னன் அந்த உற்சவர் சிலையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் என்று தெரியவந்தது ஸ்ரீராமானுஜர் உடனடியாக தியானநிலையில் ஸ்ரீஹரியை வேண்டிக்கொள்ள அந்த உற்சவர் சம்பத்குமாரர் சிலை அவர் மடியில் விழுந்தது. அந்த சம்பத்குமாரரை ராமானுஜர் இந்த கோவிலில் அவர் பிரதிஷ்டை செய்தார்

இங்கு சம்பத் குமாரர் உற்சவராக இருக்கிறார். இவரை வேண்டிக்கொள்ள குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. பங்குனி மாதத்தில் 10 நாட்கள் இவருக்கு விமரிசையாக விழா நடக்கிறது அன்று ராமானுஜரின் மடியில் சம்பத்குமார் அமர்வது போன்ற நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த கோயில் தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழும் மண்.

ஓம் நமோ நாராயணாய நம:

No comments:

Post a Comment