Wednesday, April 29, 2020

தோசைக்கு சீனி

சீனிவாசன் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்.அவர் கடையில் தோசைக்கு தொட்டு கொள்ள சீனி கொடுப்பார்கள்.ஆனால் சீனி விலை உயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை.

ஒரு போர்டு எழுதி போட்டார்.

"இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது"

கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்.
சாப்பிட போனார் .முதலில் ஒரு தோசை வாங்கினார்
இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்.சீனி கேட்டார்.முதலாளி சொன்னார் சீனி கிடையாது

கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் " முதல் தோசைக்கு மட்டும் கிடையாது இது இரண்டாவது தோசை முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார்.

அடுத்த நாள் போர்டு ஐ மாற்றி எழுதினார்."இனி மேல் தோசைக்கு சீனி கிடையாது"

கிச்சாமி மறுநாள் வந்தார். இரண்டு தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்.ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு தோசை வந்தது! மேலே உள்ள தோசையை சாப்பிட்டு முடித்தார்.சீனி கேட்டார்.

முதலாளி " முடியாது போர்டு ஐ பார்".

கிச்சாமி நீ போர்டு ஐ பார் இனி" மேல் " தோசைக்கு தானே கிடையாது? கீழே உள்ள தோசைக்கு கொடு என்றார்

சீனி வாசன் ஓட்டலை மூடி விட்டார்.
😁😁

No comments:

Post a Comment