Sunday, April 26, 2020

நிஜ ரூப தரிசனம்🙏

  நிஜ ரூப தரிசனம்🙏

🙏ஸ்ரீவராக லட்சுமி நரசிம்மா் கோயில் 🙏என்பது சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் மாநிலமான ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது.  மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.

விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.

இக்கோயிலின் தல புராணத்தின்படி தந்தையின் மறைவுக்குப் பிறகு பிரகலாதன் நரசிம்மருக்குக் கோயில் கட்டினான். அதன்பிறகு, அந்த யுகத்தின் முடிவில் கோயில் கேட்பாரற்று அழியத் தொடங்கி, மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது. அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் தெய்வீக சக்தியால் இந்த இடத்துக்கு வந்து அந்தச் சிலையைக் கண்டெடுத்து அழிவுற்ற கோயிலை மீண்டும் கட்டினான். அந்தச் சமயத்தில் ஒலித்த அசரிரீயானது அந்த சிலை உருவத்தை காண இயலாமல் சந்தனத்தால் மூடி வைக்கும்படி கூறியது. ஆண்டுக்கு ஒரு முறையே அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அது போலவே இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார்.  அக்ஷயதிருதியை அன்று சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.

கோயில் வளாகத்தின் நடுவே கருவறை உள்ளது. அதற்கு நடுவில் ஒரு சிறிய மேடையில் மூலவர் சந்தனப் பூச்சுடன் கூடிய லிங்கம் போல காட்சித் தருகிறார். அக்ஷய திருதியை சந்தன பூச்சு அகற்றப்பட்டு அவரின் மெய்யான உருவம் வெளிப்படுத்தப்படுகிறது. இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன், இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருவார். இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும். கையில் தாமரையுடன் ஆண்டாள் , லட்சுமி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனித் தனியே சன்னிநிதிகள் உள்ளன.🙏

No comments:

Post a Comment