Wednesday, April 8, 2020

உங்களுக்குள் ஒரு மருத்துவர்

உங்களுக்குள் ஒரு மருத்துவர் - 33

நாம் சாப்பிடுவது என்பது உணவில் இருக்கும் ரசாயனச் சத்துக்களுக்காக அல்ல. 

அதிலிருக்கும் உயிர்ச் சக்திக்காக. 

எனவே, இந்த இந்த உணவுகளில் இந்த இந்த சத்து இருக்கிறது வகை பிரித்துச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. 

1940 களில் பிரெஞ்சு ஆய்வாளர் டாக்டர் லூயி கேர்வரான் சத்துக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். 

மனித உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவு மூலம் நாம் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று நம்பிவருகிறோம். 

உதாரணமாக கால்சியம் சத்துக்களுக்காக நாம் பாலையும், முட்டையையும் உணவாகப் பயன்படுத்துகிறோம். 

கேர்வரானின் ஆய்வு இதைப் பற்றியதுதான். 

மனிதன் கால்சியத்திற்காக பாலையும், முட்டையையும் பயன்படுத்துகிறான் என்றால் பால் தரும் மாடு கால்சியத்தை எங்கிருந்து பெறுகிறது? 

முட்டை தரும் கோழி கால்சியத்தை எங்கிருந்து பெறுகிறது? 

என்பதுதான் கேர்வரானின் கேள்வி.

மாடும், கோழியும் தங்கள் உணவான மெக்னீசியத்தில் இருந்தும், மைக்காவில் இருந்தும் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உருவாக்கிக் கொள்கின்றன. 

சாதாரண ஐந்து அறிவு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இருக்கும் உடலமைப்பு பரிணாம வளர்ச்சியில் உச்ச கட்ட படைப்பான மனிதனுக்கு இல்லையா? 

இருகிறது என்பது தான் அறிவியல். 

எந்த உணவு சாப்பிட்டாலும் அதிலிருந்து கிடைக்கும் சக்தியில் இருந்து உடலானது தனக்குத் தேவையான சத்துக்களை உற்பத்தி செய்து கொள்கிறது. 

எனவே நாம் சாப்பிடும் உணவு நமக்குப் பிடித்ததாக இருக்க வேண்டுமே தவிர, அதில் என்ன விதமான சத்துக்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிய வேண்டிய அவசியமில்லை. 

நமக்குப் பிடித்த உணவை, பசிக்கும் போது சாப்பிட்டால் உடலின் தேவைகளை உடலே உருவாக்கிக் கொள்ளும்.

அப்படியானால் எப்படியான உணவுகளை நம் தினசரி வழக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்? 

முதலில் காலை உணவைப் பார்க்கலாம். 

காலை உணவை ஆங்கிலத்தில் “ப்ரேக் ஃபாஸ்ட்” என்று அழைப்பார்கள். அப்படியென்றால் விரதத்தை முடித்துக் கொள்வது என்று அர்த்தம். 

(BREAK THE FASTING). 

வெறும் வயிற்றோடு, ஏறக்குறைய முழு விரதம் போல நாம் இரவுகளைக் கழிக்கிறோம். 

ஒரு முழு விரதம் இருந்து விட்டு அதை எப்படி பூர்த்தி செய்வோம்? 

காலையில் இருந்து வெறும் வயிற்றோடு இருந்துவிட்டு, திட உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை முடிப்போமா? 

இல்லை. முதலில் திரவ உணவுகளையே உண்ணுவோம். 

அப்படித்தான் நம் காலை உணவுகள் எளிமையான திரவ உணவுகளாக இருப்பது நல்லது. 

முழு இரவின் விரதத்தை முடித்துக் கொள்ள திரவ உணவுகள் அருமையானவை. 

கிராமங்களில் காலை உணவாக "நீர் ஆகாரம்" என்று அழைக்கப்படும் திரவ உணவை அருந்துவதை நீங்கள் பார்த்ததில்லையா? 

முதல் நாள் எஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி, அந்த தண்ணீரை மட்டும் மறுநாள் காலையில் குடிப்பார்கள். 

இது தான் நீராகாரம். 

ஆக, காலை உணவை திரவ உணவாக உண்ணும் பழக்கம் உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கிறது. 

நாகரிக வளர்ச்சியில் நாம் உணவு வகைகளைப் போலவே, உணவு முறைகளையும் இழந்தோம்.

காலை உணவாக திரவ உணவு. 
மதிய வேளையில் திட உணவு. இரவுகளில் எளிய உணவு. 

இப்படி நம்முடைய உணவு முறைகளை வைத்துக் கொண்டால் உடல்நலம் சீராக இருக்கும். 

நாம் உண்ணும் எல்லா உணவுகளுமே நமக்குப் பிடித்த உணவுகளாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

(தொடர்ந்து பயணிப்போம்.......)
நன்றி - அ. உமர் பாரூக் (அக்குபஞ்சர் மருத்துவர் M.Acu, M.Sc(Psy), D.Litt,)

No comments:

Post a Comment