Wednesday, April 29, 2020

சிவரகசியங்களை அறிய வைக்கும் குங்கிலியம்

சிவரகசியங்களை அறிய வைக்கும் குங்கிலியம்!!!
*************

சிவாலயத்தில் யார் தினமும் குங்கிலியப் புகை போடுகின்றார்களோ, அவர்களுக்கு அனைத்து தெய்வீக ரகசியங்களும் தெரியவரும் என அகத்தியர் தனது வாத காவியம் நூலில் கூறுகிறார்.
                      எமதூதர்களிடம் இருந்து விடுதலை பெறும் சக்தி அவனுக்கு மட்டுமல்லாமல், அவன் நினைத்தால் மற்றவர்களையும் எமதூதுவர்களிடம் இருந்து மீட்கும் சக்தியையும் பெறும் ஆற்றலையும் பெறுவான்! இது சித்தர்கள் உபதேசித்த சிவாலய வழிபாட்டு ரகசியங்களில் ஒன்று ஆகும்;

குங்கிலிய மரங்களிலிருந்து இரப்பர் பால் போல வடியும் ஒரு பிசினே, வீடுகளில் நாம் உபயோகிக்கும் குங்குலியம். இறை வழிபாடுகளில் மத பாகுபாடு கடந்து அனைத்து மதங்களிலும் சாம்பிராணி, குங்குலியம் போன்றன  புகை இடம் பெறுகிறது.

குங்கிலியபுகையே, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப்புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்கக்கூடியவையாகவும் பயன்பட்டன.

குங்கிலியத் தூளை நெருப்பில் போட்டு புகைக்க வீட்டிலுள்ள விஷ காற்று சுத்தப்படும்.

பழங்கால வழக்கம் :
********

முன்னோர் கூறியவை எல்லாம், சுத்த பட்டிக்காட்டுத்தனம் என்று சொல்லி, இன்று பல்வேறு வழிகளில், இயற்கையை விட்டு விலகி, நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டோம். 

இயற்கை குங்கிலியம் எதற்கு என்ற மகத்துவம் அறியாமல், அதை விலக்கி, செயற்கையாக கிடைக்கும், சாம்பிராணி வில்லைகளை வாங்கி, நாமும் சாம்பிராணி புகையை வீடுகளில் போடுகிறோம், என்று நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்கிறோம்.

தூபக்கால் எனும் சாம்பிராணி காட்டும் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, அதில் நெருப்பை உண்டாக்கி, அதில் சுத்த குங்கிலியம் பொடியாக்கி தூவ, வீடுகளில், தெய்வீக நறுமணம் உண்டாகும். இந்த சாம்பிராணி புகையை வீடுகளில் உள்ள பூஜையறையில் காட்டி விட்டு, பின்னர், வீடு முழுவதும், வரவேற்பறை, சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சாம்பிராணி புகையை காட்டி வருவர்.

குங்குலிய சாம்பிராணி புகை இடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

அக்காலங்களில், குழந்தைகள் அனைவரும் வாரமொருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்ததும், தலைக்கு சாம்பிராணி புகை போடுவர், பெண்களும் குளித்து வந்ததும், சாம்பிராணி புகையை சுவாசித்து, தலையிலும் காட்டிக்கொள்வர். ஏன், என்ன காரணம்?

முன்னோர் செயலில் எதற்கும் ஒரு விளக்கம் இருக்கும், பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள இராஜ உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல், காத்து வரும்.

மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமல், ஆண்கள் பெண்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்தன.

புற்று நோயை குணப்படுத்தும் இயற்கை சாம்பிராணி:

தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய, மருத்துவ தன்மை மிக்கவை என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

இதையே தானே, நம் முன்னோர் அன்றே கூறி, எண்ணை தேய்த்து குளிக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மற்றும் வீடுகளில் வாரமிருமுறையும் சாம்பிராணி புகைக்கச் சொல்லி, அறிவுறுத்தி வந்தனர்.

நச்சுக்களை அழிக்கும் :

சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது, எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகி விடும், வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் நேராது என்ற எண்ணத்திலேயே, வீடுகளில் சாம்பிராணி புகை இட்டனர்.

வீடுகளில் வாரமிருமுறை சாம்பிராணி புகையை இட்டு வர, நச்சுக்கள் எல்லாம், விலகி விடும். இப்போது நாம் உபயோகிக்கும் செயற்கை சாம்பிராணிகளால் பலன் ஏதுமில்லை. மாறாக, அவற்றின் செயற்கைத் தன்மை சிலருக்கு ஒவ்வாமையை, உண்டாக்கி விடலாம்.

செல்வம் ஈர்க்கும்:

குங்கிலியம் பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் புகை காட்டினால்

கெட்ட சக்திகள் விலகி, நல்ல சக்திகள் உருவாகும்...

செல்வ செழிப்பு உண்டாகும் தொழில் செய்யும் இடத்தில் மக்கள் வரவு அதிகம் ஆகும்.வியாபாரம் பெருகும்.

கொசுக்களை தடுக்க :

மழைக்காலங்களில், வீடுகளில், சாம்பிராணியுடன் வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகு இவற்றை சேர்த்து, படுக்கை அறைகளில் புகை இட்டு வர, மழைக்கால வியாதிகளைப் பரப்பும் கொசுக்கள் எல்லாம் நொடியில் ஓடி விடும், இரவில் கொசுக்கடி இல்லாத, சுகமான உறக்கத்தை அனுபவிக்கலாம்.

தலைவலி நீங்க:

சளித் தொந்தரவு, தலைவலி, அதிகத் தும்மல், பொடுகு, பேன் தொல்லை, தலைமுடி உதிர்தல், மூக்கில் நீர்வடிதல், கேச நோய்கள் போன்ற தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தலைக்குக் குளித்த பின்னர் கூந்தலை உலர்த்தாமால் இருந்தால்...

தலைக்குக் குளித்த பின்னர் கூந்தலை உலர்த்தவேண்டியது  மிக அவசியம். சரியாக உலர்த்தாவிட்டால் தலையில் நீர் கோர்த்தல், தலைபாரம், சளி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடலில் சேரும் வாயுவை ,கபத்தை வெளியேற்றுவதற்கும், மூலம், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் போக்குவதற்கும், வாதங்கள் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்துவற்காகவும் வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது.

யார் யார் செய்யலாம்?

ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள்... என வயது வரம்பின்றி அனைவரும் தூபம் போட்டுக்கொள்ளலாம். ஆஸ்துமா, மூச்சடைப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. இதை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.

உண்மையான குங்கிலியம் பர்வதமலை, கொல்லைமலை, கஞ்சமலை, சதுரகிரிமலை, அத்ரிமலைப் பகுதிகளில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது; இதிலும் கலப்படம் செய்யத் துவங்கியுள்ளனர்; கலப்படமற்ற குங்கிலியத்தைப் பயன்படுத்தி ஈசனின் அருளைப் பெறுவீராக!

ஓம் திருமூல தேவாய நமஹ

No comments:

Post a Comment