Sunday, April 26, 2020

கோவிலில் கொடுத்த பூமாலை

👨‍👦ஆனந்த யாழ்👩‍👦

ஆன்மீகத் தகவல்


பகிர்வு

┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​

ஆன்மீக கடலிலிருந்து சில துளிகள் (தகவல்கள்)


1) கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் ஸ்வாமி படத்திற்கு அணிவிக்கலாமா.? 


ஸ்வாமி பிரசாதமாகக் கொடுக்கும் மாலைகளுக்கு நிர்மால்யம் என்று பெயர். இவற்றை மற்ற ஸ்வாமி படங்களுக்கு சாத்தக் கூடாது. நிர்மால்யத்தை வாஹனங்களுக்கும் (வண்டிகளுக்கும்) போடக்கூடாது. 

(இந்திரன் துர்வாசமுனிவர் கொடுத்த துளிசிமாலையை ஐராவதத்தின் (இந்திரனின் வாஹனமான வெள்ளையானை) மேல் போட்டதினால் மிகவும் கஷ்டதிற்கு உள்ளானான்) 


பிறகு நிர்மால்யத்தை என்னதான் செய்ய வேண்டும்.? 


நம்முடைய வீட்டின் வாசலின் (கதவின்) மேல் சாத்தலாம். 


2) புதிதாக செய்த ஸ்வாமி சிலைகளை ஜலவாசமாக நீருக்குள் வைப்பது ஏன்.? 


மண்ணிலிருந்து எடுக்கும் தங்கம் உடனே ஜொலிக்காது. மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு பக்குவப்படும் போது தான் ஜொலிக்கும். அது போல புதிய சிலைகள் அதற்குரிய தெய்வத் தன்மையை தாங்கும் சக்தியைப் பெற., மந்திரப் பூர்வமாக தானிய வாசம்., ஜலவாசம்., சயன வாசம் ஆகிய சடங்குகளைச் செய்வார்கள். 


3) மீனாக்ஷி கல்யாணம்., சீதா கல்யாணம்., ராதா கல்யாணம் என கல்யாணத்திற்கு பெண் தெய்வங்களின் பெயரினாலேயே குறிப்பிடுவது ஏன்.?


ஒரு ஆண் மகனுக்கு தான., தர்மம்., யாகம்., (முன்னோர் வழிபாடு) செய்ய திருமணமான பின்னரே முழு அதிகாரத்தை சாஸ்திரம் அளித்துள்ளது. மற்றொன்று இல்லற வாழ்வின் பொறுப்புணர்ந்து., குடும்பத்திற்காக உழைக்கும் கடமை அவனுக்கு தரப்படுகிறது. இந்த இரண்டையும்., ஒரு பெண்ணின் கரத்தை பற்றிய பிறகு தான் ஆண் அடைகிறான். எனவே குடும்ப வாழ்வில் பெண்களே முக்கியத்துவம் பெறுகின்றனர். இதனால் தான் திருமணங்களை பெண் தெய்வங்களின் பெயரால் குறிப்பிடுகின்றனர். 


4) தெற்கு நோக்கிய அம்மன்.! 

துர்க்கையம்மன் பெரும்பாலும் வடக்கு நோக்கியே கோவில்களில் காட்சி தருவாள். ஆனால் திருவாரூர் மாவட்டம் ஆந்தக்குடியில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் துர்க்கையம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பான அம்சமாகும். மரணபயம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட்டு அருள் பெறுகின்றனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் கூட இங்கு வழிபட்டு பலனடைகின்றனர். 


5) ராமேஸ்வரம் ~ ஆடி மாதம். சிவஸ்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில்., ஆடி மாதத்தில் நீராடுவது புனிதமானதாக கருதப்படுகிறது. இங்கு ராவணனைக் கொன்ற பாவம் நீங்க ராமர் பிரதிஷ்டை செய்த சிவன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இவரை ராமநாதஸ்வாமி என்று அழைக்கப் படுகின்றார். இங்கு அருள்புரியும் பர்வதவர்த்தினி அம்மனுக்கும்., ராமநாத சுவாமிக்கும் ஆடி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று இங்கு நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருவதாகும். காசி யாத்திரை மேற்கொள்பவர்கள்., ராமேஸ்வரம்., தனுஷ்கோடி கடற்கரையில் லிங்க பூஜை செய்து., அந்த மண்ணை எடுக்கொண்டு ராமநாத ஸ்வாமியை வழிபட்டு., பின் காசி., ப்ரயாக் (திருவேணி சங்கமம்) ஆகிய இடங்களில் நீராடி ராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை (இரு இடங்களிலும்) கரைத்து., அங்கிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதஸ்வாமிக்கு கொண்டு வந்த கங்கை நீரால் அபிஷேகம் செய்து காசி யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ------------------------


பழனி மாணிக்கம்.


பகிர்வு

┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​ 

No comments:

Post a Comment