Saturday, April 25, 2020

கருட புராணம்

கருட புராணம் - அறிமுகம் 

இன்று முதல் 

18 புராணங்களில் ஒன்றான கருட புராணம் 19,000 ஸ்லோகங்கள் கொண்டது. இப்பூவுலகில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் நைமிசாரணியம். அங்கிருக்கும் சவுனகாதி முனிவர்களைத் தரிசிக்க சூதமா முனிவர் வந்தார். அவரை முனிவர்கள் வரவேற்று உபசரித்து வணங்கினர். நால்வகை புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல விஷ்ணு சம்பந்தப்பட்ட சாத்வீக புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினர். ஸ்ரீமந்நாராயணனை முன்பொரு சமயம் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வான் பணிந்து உலக நன்மையைக் கருதி ஒரு கேள்வியைக் கேட்க, 'பகவான் அதற்குத் தக்க விடையளித்தார். அவ்வாறு திருமால் கருடனுக்குக் கூறியதையே உங்களுக்குக் கூறுகிறேன்' என்று கூறி கருட புராணத்தைக் கூற ஆரம்பித்தார். 

கருடபுராணம் அளவில் பெரியதோ, சிறியதோ அல்லாமல் நடுத்தரமானது. இது பூர்வ காண்டம் என்று இருபெரும் பகுதிகளைக் கொண்டது. பல அத்தியாயங்களையும் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் முற்பகுதி பெரியது, பிற்பகுதி சிறியது. உலகில் ஜீவன்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணம் என்ன? ஏன் பிரேத ஜன்மம் அடைகிறது? நரகம், சொர்க்கம் அடைவோர் யார்? ஏன்? நற்கதி கிடைப்பதற்கான வழி யாது? என்றெல்லாம் கேட்க, திருமால் புன்னகையுடன் விடை தரலானார்.

பிறந்தவன் இறப்பது நிச்சயம் என்பதை உணர வேண்டும். நமனுக்குப் பயந்து நல்ல தருமங்களை ஆற்றி அறநெறிப்படி வாழவேண்டும். வருணா சிரம தருமப்படி அதாவது அவரவர் குல மரபுப்படி வழுவாது நடப்போர் போகம், யோகம் ஒருங்கே பெற்று நீடுழி வாழ்ந்து இறுதியில் தமக்குரிய உலகை அடைவர். பற்றற்றவர்களாய், அறிஞர்களாகி பகவானைத் தியானித்து நல்வழியில் நற்பேறு பெற முயற்சி செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய அவர் ஆக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வாகும்.

காசியப முனிவருக்குக் கருடனே இப்புராணத்தைக் கூறினார். நான் வியாசரிடமிருந்து இதனைக் கேட்டேன் என்று மேலும் கூறலானார். முதலில் மஹாவிஷ்ணுவின் இருபத்து இரண்டு அவதாரங்களைப் பார்ப்போம்.

1. முதன் முதலில் குமாரன் வடிவில் தோன்றி பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து தவம் செய்தார்.

2. பூவுலகை மீட்க வராக அவதாரம் எடுத்தார்.

3. பலவகைத் தந்திரங்களை உலகில் பரப்ப தேவரிஷியாய்த் தோன்றினார்.

4. நர நாராயணனாய் அவதரித்தார். (நரன், ஆவேசாவதாரம், நாராயணன் - அம்சாவதாரம்)

5. கபிலராக அவதரித்து சாங்கிய யோகத்தைத் தனது சீடர் அசூரிக்குக் கற்பித்தார்.

6. அத்திரி, அனுசூயை தம்பதிகளுக்கு மகனான தத்தாத்திரேயர் அவதாரம்.

7. சுவயம்பு மன்வந்ரத்தில் ருசி, ஆகுதியோருக்கு மகனாகத் தோன்றி பல யாகங்களைச் செய்தார்.

8. அடுத்து நபி, மேரு புத்திரனால் உருக்கிரமன் என்ற பெயரில் அவதரித்தது பற்றற்ற நிலையில் இருந்து அனைவர்க்கும் வாழ்வின் நன்னெறிகளைத் போதித்தார்.

9. பிருது என்ற பெயரில் தோன்றி பூவுலகத்திற்குத் தானியங்களையும், மூலிகைகளையும் வழங்கினார்.

10. மச்சாவதாரம் எடுத்து பிரளயத்திலிருந்து வைவஸ்வத மனுவைக் காத்தருளினார். வேதங்களையும் ரக்ஷித்தார்.

11. தேவாசுரர்கள் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைய வாசுகியை நாணாக்கி, மந்தர மலையை மத்தாக்கி கடையும்போது மலை உள்ளே அழுந்திட, அதனை ஆமை வடிவில் நிலைப்படுத்திய கூர்மாவதாரம்.

12. அடுத்து உலகில் மருத்துவம் பரப்ப எடுத்த தன்வந்திரி அவதாரம்.

13. அசுரர்களை ஏமாற்றி தேவர்களே அமுதம் பெறுமாறு பங்கிட எடுத்த அழகிய, கவர்ச்சியான மோஹினி அவதாரம்.

14. இரணியனைக் கொன்று, பக்தன் பிரகலாதனுக்கு அருளிட எடுத்த நரசிம்மாவதாரம்.

15. மகாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி அருள மூன்றடி மண் கேட்க எடுத்த வாமனாவதாரம் (திருவிக்கிரமா அவதாரம்)

16. தந்தையாகிய ஜமதக்கினியைக் கொன்ற கார்த்தவீர்யாஜுனனையும், இருபத்தோரு தலைமுறை மன்னர்களையும் அழிக்கத் தோன்றிய பரசுராமர் அவதாரம்.

17. பராசரர், சத்தியவதி இருவருக்கும் மகனாகத் தோன்றிய வேத வியாசர்.

18. நாரதராக அவதரித்து தேவர்களுக்கு வாழ்க்கை முறை தத்துவங்களை உபதேசித்தது.

19. இராமாயணக் காவியத் தலைவனாக விளங்கிய இராமாவதாரம்.

20. கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்து கம்சன், சிசுபாலன் தந்தவக்கிரர்களை அழித்துப் பாண்டவர்க்கு உதவுதல், கீதோபதேசம் முதலியன.

21. புத்த மதத்தைத் தோற்றுவிக்க புத்தராகத் தோன்றினார் திருமால்.

22. அடுத்து கல்கி அவதாரம் எடுக்கப்போவதும் அவரே. 

[சனகர், பலராமன் அவதாரமும் அவரே என்று சிலர் கூறுவர். அத்துடன் கஜேந்திரனுக்கு அருளத் தோன்றியது. வாலகில்யரிஷி (விராட் ஸ்வரூபமாய் விளங்குவது எல்லாம் அவனது அவதாரமே என்பர்.)]

புராணத் தோற்றம் பற்றிய வேறுவிதமான வரலாறு
==================

நாரதர், தட்சன், பிருகு முதலிய ரிஷிகள் பிரம்மலோகம் செல்ல அவர்களுக்குப் பிரம்மன் உபதேசம் செய்தார். பறவைகளின் அரசனாகிய கருடன் தவமியற்றி விஷ்ணுவைத் திருப்தி செய்ய, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று பகவான் கேட்க, கருடன் தான் பெருமானின் வாகனமாக வேண்டும் வரம் கேட்டான். மேலும் பாம்புகள் தன்னைக் கண்டு அச்சமுறவேண்டும் என்றும், புராணம் இயற்றும் ஆற்றல் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். இவ்வாறாக கருடன் இப்புராணத்தை விஷ்ணுவிடம் கேட்டு, பின்னர் பிரம்மனுக்குக் கூறினார். பிரம்மனிடம் இருந்து வியாசரும், அவர் மூலம் மற்றோரும் அறிந்தனர்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!

ஶ்ரீ கருட அஷ்டோத்ரம்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ௐ    கருடாய நம:
ௐ     வைந தேயாய நம:
ௐ     கக பதயே  நம:
ௐ     காஶ்யபாய நம:
ௐ     அக்னயே   நம:
ௐ     மஹா பலாய நம:
ௐ     தப்த காஞ்சன வா்ணாபாய நம:
ௐ     ஸுபர்ணாய  நம:
ௐ     ஹரி வாஹனாய  நம:
ௐ    சந்தோ மயாய  நம:
ௐ     மஹா தேஜஸே  நம:
ௐ    மஹோத் ஸாஹாய  நம:
ௐ    மஹா பலாய  நம:
ௐ    ப்ரஹ்மண்யாய  நம:
ௐ    விஷ்ணு  பக்தாய  நம:
ௐ    குந்தேன்து தவளாநனாய  நம:
ௐ    சக்ர பாணி தராய  நம:
ௐ    ஶ்ரீ மதே நம:
ௐ    நாகாரயே  நம:
ௐ    நாக பூஷணாய  நம:
ௐ    விஜ்ஞாநதாய  நம:
ௐ    விஶேஷக்ஞாய  நம:
ௐ   வித்யா நிதயே  நம:
ௐ   அனா மயாய  நம:
ௐ   பூதி தாய  நம:
ௐ   புவன தாத்ரே நம:
ௐ   பூஷயாய நம:
ௐ   பக்த வத்ஸலாய  நம:
ௐ   ஸப்த சங்தோ மயாய  நம:
ௐ    பக்ஷிணே  நம:
ௐ   ஸுரா ஸுர பூஜிதாய  நம:
ௐ   கஜ புஜே  நம:
ௐ   கச்ச பாஶினே  நம:
ௐ   தைத்ய ஹந்த்ரே  நம:
ௐ   அருணா நுஜாய  நம:
ௐ    அம்ருதாம்ஶாய  நம:
ௐ    அம்ருத வபுஷே  நம:
ௐ    ஆனந்த நிதயே  நம:
ௐ    அவ்யயாய   நம:
ௐ    நிக மாத்மனே  நம:
ௐ   நிரா ஹாராய  நம:
ௐ   நிஸ் த்ரை குண்யாய  நம:
ௐ   நிரவ்யாய   நம:
ௐ   நிர் விகல்பாய  நம:
ௐ   பரஸ்மை ஜ்யோதிஷே  நம:
ௐ   பராத் பராய  நம:
ௐ   பரஸ்மை  நம:
ௐ   ஶுபாங்காய  நம:
ௐ   ஶுபதாய  நம:
ௐ   ஶூராய  நம:   (50)
ௐ   ஸூக்ஷ்ம ரூபிணே  நம:
ௐ   ப்ருஹத் தனவே நம:
ௐ   விஷாஶினே  நம:
ௐ   விதி தாத்மனே  நம:
ௐ   விதிதாய  நம:
ௐ   ஜய வர்தனாய  நம:
ௐ   தார்ட்யாங்காய  நம:
ௐ   ஜகதீஶாய  நம:
ௐ   ஜனார்தன மஹா த்வஜாய  நம:
ௐ   ஸதாம் ஸந்தாப விச்சேத்ரே  நம:
ௐ   ஜரா மரண வர்ஜிதாய  நம:
ௐ   கல்யாண தாய  நம:
ௐ   காலா தீதாய  நம:
ௐ   களா தர ஸம ப்ரபாய  நம:
ௐ   ஸோம பாய  நம:
ௐ   ஸுர ஸங்கேஶாய  நம:
ௐ   யஜ்ஞாங்காய  நம:
ௐ   யஜ்ஞ பூஷணாய   நம:
ௐ   மஹா ஜவாய  நம:
ௐ   ஜிதா மித்ராய  நம:
ௐ   மன்மத ப்ரிய பான்தவாய  நம:
ௐ   ஶங்க ப்ருதே  நம :
ௐ   சக்ர தாரிணே  நம:
ௐ   பாலாய  நம:
ௐ   பஹு பராக்ரமாய  நம:
ௐ   ஸுதா கும்ப தராய  நம:
ௐ   தீமதே  நம:
ௐ   துரா தர்ஷாய  நம:
ௐ   தூரா ரிக்னே  நம:
ௐ   வஜ்ராங்காய  நம:
ௐ    வரதாய  நம:
ௐ    வந்த்யாய  நம:
ௐ    வாயு வேகாய  நம:
ௐ    வர ப்ரதாய  நம:
ௐ    விநு தாநன்தநாய  நம:
ௐ   ஶ்ரீ தாய  நம:
ௐ   விஜி தாராதி ஸங்குலாய  நம:
ௐ   பதத் வரிஷ்டராய  நம:
ௐ   ஸர்வேஶாய  நம:
ௐ   பாபக்னே  நம:
ௐ   பாப நாஶனாய  நம:
ௐ   அக்னி ஜிதே  நம:
ௐ    ஜய கோஷாய  நம:
ௐ   ஜகதாஹ்லாத காரகாய  நம:
ௐ   வஜ்ர நாஸாய  நம:
ௐ   ஸு வக்த்ராய  நம:
ௐ   ஶத்ருக்னாய  நம:
ௐ    மத பஞ்ஜனாய  நம:
ௐ   காலக்ஞாய   நம:
ௐ   கம லேஷ்டாய  நம: (100 )
ௐ   கலி தோஷ நிவாரணாய  நம:
ௐ   வித்யுன் நிபாய  நம:
ௐ   விஶாலாங்காய  நம:
ௐ   விநுதா தாஸ்ய விமோசனாய  நம:
ௐ    ஸ்தோ மாத்மனே  நம:
ௐ   த்ரயீ மூர்த்னே  நம:
ௐ   பூம்னே  நம:
ௐ   காயத்ர லோசனாய  நம:
ௐ   ஸாம கான ரதாய  நம:
ௐ   ஸ்ரக்வினே  நம:
ௐ    ஸ்வச் சந்த கதயே  நம:
ௐ   அக்ரண்யே  நம:
ௐ   ஶ்ரீ பக்ஷி ராஜ பர ப்ரஹ்மனே நம:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment