Wednesday, April 29, 2020

தட்சணாமூர்த்தியின் திருக்கோலங்கள்

தட்சணாமூர்த்தியின் திருக்கோலங்கள்!

🌹 தஞ்சைக்கு அருகிலுள்ள திருவையாறு அய்யாறப்பர் திருக்கோவிலில், தனிச்சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்புரிகிறார் தட்சிணா மூர்த்தி.

🌹 இவரது மேல்நோக்கிய வலக்கரத்தில் கபாலமும், கீழ்நோக்கிய வலக்கரத்தில் சின் முத்திரையும், மேல்நோக்கிய இடக்கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடக்கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன.
 இவரது காலடியில் ஆமை இருப்பதைக் காணலாம்.

🌹 திருநாவலூர் திருத்தலத்தில் காளை வாகனத் துடன் நிற்கும் நிலையில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

🌹 திருப்பூந்துருத்தியில் வீணையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

🌹 கோவில்பட்டி யிலிருந்து சங்கரன் கோவில் செல்லும் வழியில் உள்ள கழுகு மலை வெட்டுவான் என்ற ஊரிலிருக்கும் சிவன் கோவிலில், மிருதங்கம் வாசிக்கும் நிலையில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

🌹 ஆந்திரா வில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத் தில், ஹேமாவதி என்ற இடத்தில் உள்ள கோவிலில், ஐயப்பன்போல் அமர்ந்த நிலையில் யோக மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

🌹 திருவிடைமருதூரில் உள்ள கோவிலில் உமையம்மையுடன் கூடிய நிலையில் தட்சிணா மூர்த்தி அருள்புரிகிறார். இவரை "சாம்ய தட்சிணாமூர்த்தி' என்பர்.

🌹 வாதாபியில் உள்ள கோவிலில் அர்த்த நாரீஸ்வர வடிவத்தில் "வீணாதர தட்சிணா மூர்த்தி' அருள்புரிகிறார்.

No comments:

Post a Comment