Saturday, April 25, 2020

ஸ்ரீசூர்ணம்

பசு மஞ்சளை சிறு துண்டுகளாக்கி சிறிதளவு ஜலத்தில் வேக வைத்து (புழுக்குதல்), பிறகு வெயிலில் உலர்த்தி ஈரம் போகக் காய வைக்க வேண்டும். காய்ந்த மஞ்சளை முதலில் மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். 

ஒரு வாயகன்ற போஸியில் நல்ல பட்டுத்துணியைக் கட்டி, துணியின் மேல் அரைத்த மஞ்சள் பொடியை இட்டு விரலால் அழுத்தி வட்ட வட்டமாய்த் தேய்த்தால் வஸ்த்ரகாயம் என்ற முறையில் பட்டுத் துணி மூலம் மிக சன்னமான மஞ்சள் பொடி போஸியில் சேரும். 

எட்டுக்கு ஒரு பங்கு என்ற ரீதியில் இதன் மீது அரிசி மாவு எடுத்து இதே போல் துணிமேல் தேய்த்து வஸ்த்ரகாயம் பண்ணினால் சன்னமான அரிசி மாவும் மஞ்சள் பொடியுடன் சேரும். இரண்டு பொடிகளையும் நன்றாகக் கலந்து பிறகு கெட்டியாக உருட்ட வருமளவு பால் அல்லது ஜலம் சேர்த்து நீளமாய் உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

நம் உடலுக்கு ஆரோக்யத்தைத் தரும் அம்ருத ஸஞ்ஜீவினியான  கர்க்குமின் மூலப்பொருள் இப்படி நம் அகத்தில் வஸ்த்ரகாய முறையில்  தயாரிக்கப்பட்ட ஸ்ரீசூர்ணம் அணிவதால் உடலில் உறிஞ்சப்பட்டு அளவில்லாத நன்மையை விளைவிக்கிறது. இந்த பொடியை நேரடியாக ஸ்ரீசூர்ண குடுவையில் சேகரித்து வைத்தும் உபயோகிப்பதுண்டு.

No comments:

Post a Comment