#பசியாற்றிய_ஆச்சார்யன்
#சொந்தஅனுபவம்
முக்கூர் ஸ்ரீமத் அழகியசிங்கரின் காருண்யத்தை அறியாதோர் யாருமில்லை.
ஆடிட் வேலையாக திருச்சி சென்றிருந்தேன்..அப்போது ஸ்ரீரங்கம் தஸாவதார சன்னதியில் அஹோபிலமடம் 44 ம் பட்டம் முக்கூர் ஸ்ரீமத்அழகியசிங்கர் எழுந்தருளியிருந்தார்..காலை ஸ்ரீ ஸன்னதியில் விஸ்வரூபம் சேவிக்க ஆசைப்பட்டு இரவு 9.30 மணிக்கு அஹோபிலமடம் வந்தேன்.
அப்பொது ஆஸ்ரம தின்னையில் அழகியசிங்கர் ஏள்ளியிருந்தார்..அந்த இரவில் ஆஸ்ரமத்தை நான் கடந்து செல்வதை பார்த்த அவர்
"யாருடா அது"
"அடியேன் இஞ்சிமேடு" வாய் பொத்தியபடி நிலையில் சொன்னேன்
"என்னடா இந்த வேளைக்கு வர சாயங்காலமே வந்திருந்தால் ந்ருஸிம்மனை சேவிச்சிருக்கலாமே"
"அடியேன் வந்தது ஆபீஸ் வேலை.அதனால் நாழி ஆயிடுத்து"
"சாப்பிட்டியா இல்லை"
இங்கு என் பதிலுக்கு அவர் காத்திருக்கவில்லை.
"டேய்..ரங்கசாமி, அப்பு யாருடா அங்க. இவனுக்கு ஏதேனும் ஆகாரம் கொடுங்கடா"
"போடா போய் பாரு..ஏதேனும் தருவா..சாப்பிடு"
கண்ணீர் பெருகி நின்றேன்..நான் அவ்வளவு ப்ரபலமானவனும் அல்ல. என்னவொரு வாத்ஸல்யம் சிஷ்யர்கள் மீது . பசியோடு ஒருத்தன் இருக்கக் கூடாது என்ற தாயன்பு இவரிடம் நிறைய இருந்தது..
எல்லோரையும் இது போன்றே விஜாரிப்பார்..அவர் காலத்தில் ப்ரஸாதம் அள்ளி அள்ளித் தருவார்கள்.. பரிசாரகர் குறைத்து விநியொகம் பண்ணால்..அவ்வளவு தான் அவர் கதை கந்தல் தான்
எதற்கு இதை சொல்ல வந்தேன் என்றால் , கீழ்க்கட்டளை ஸ்ரீனிவாசர் சன்னதி ஆராதகர் முக்கூர் ஸ்ரீ உ.வே. சேஷாத்ரியாச்சாரியார் இந்த ஸ்ரீமத் அழகியசிங்கரின் பூர்வாஸ்ரம பேரர்..
ஸ்ரீ மத் அழகிய சிங்கர் போலவே இவருக்கும் பரந்த மனசு..
நடந்து முடிந்த ப்ரம்மோற்சவத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் பெருமாளுக்கு பத்து விதமான ப்ரஸாதங்கள் ..சேவார்த்திகளுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு விநியொகித்தார். இது நிஜ வார்த்தை.
சேவார்த்திகளுக்கு கண்ணு குளிர்ந்து வயிறும் நிறைந்தது
இந்த ஆராதகரை பார்க்கும் போதெல்லாம் மேற்படி முக்கூர் ஸ்ரீமத் அழகியசிங்கரின் நினவுதான் எனக்கு வருகிறது..
தெய்வம் அன்ன ரூபேன..எனவே எல்லா கோவில்களிலும் சேவார்த்திகளுக்கு நிறைய ப்ரஸாதம் வினியோகியுங்கள்..
முதல் முறை பெருவது ப்ரஸாதம்..அதையே இரண்டாம் முறையாக கேட்டால் அது பசிக்கு.
அதாவது வீடு திரும்பும் வரை பசி தாங்குவதற்கு..
எல்லோரும் இரண்டாம் முறை கேட்பதில்லை..கேட்பவருக்கு மட்டுமாவது தரலாம்
இறைவன் ஆலயம் வந்தவரை பசியோடு அனுப்பலாமா.
தந்து பாருங்கள்..
சேவார்த்திகள் மகிழ்வார்கள்..
ப்ரஸாதத்திற்க்கென சொல்லியே நிறைய நன்கொடைகள் கொவிலுக்கு தாருங்கள்.
முக்கூர் ஸ்ரீமத் அழகியசிங்கர் வழியை பின்பற்றுவோம்.
No comments:
Post a Comment