Saturday, April 25, 2020

இராமாநுசர்.. வைத்ய சாஸ்த்ரமும் தெரிந்தவர்!

ஸ்ரீமதே ராமாநுஜாய நம


"இராமாநுஜ அமுதம்....."

இராமாநுசர்.. வைத்ய சாஸ்த்ரமும் தெரிந்தவர்!

பசுக்களை  நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே..,,,தினமும் கொட்டாரத்திற்கு செல்வார்!
தினமும் பசுக்களைப் பார்வை இடுவார்! 
பசுக்களை தன் திருக்கைகளால் தடவி விடுவாராம்! என்ன பாக்யம் செய்திருந்தன அந்த பசுக்கள்!!
சாதாரணமாக இருக்கிறதா...அல்லது ஏதேனும் உடம்பில் நோய் இருக்கிறதா என்று  கண்டு பிடித்து அதற்கான மருத்துவத்தை அளிப்பாராம்!

பசுக்களுக்கு பால்  நன்றாக பால் சுரப்பதற்காக  தீவனத்தில் கருப்பஞ்சாறு கலந்து கொடுக்கச்சொல்வாராம்!

கிழக்குச்சித்திரை வீதியில்..வடக்குப் பகுதியில் கோசாலை இருந்தது!
ப்ருந்தாவனத்தில்,
கண்ணனின் திருவடிபட்ட மண்ணிற்கும், 
அவனது ஸ்பர்சம் பட்ட இடத்திற்கும் எப்படி மேன்மை  உண்டோ....அப்படியே...ஶ்ரீரங்கத்திலும்,,,
ஸ்வாமி ராமாநுசர்...ஸ்பர்சம் பட்ட இடமெல்லாம்........
ஏற்றம் பெற்றது!புனிதம் அடைந்தது!!
நாம் சாவகாசமாக..
.திருவரங்கத்தின் வீதிகளிலும்,.....
மடத்திலும்,
மடத்தின் கிணற்றிலும், காவிரிக் கரையிலும், கோயிலில் உள்ளே...... மடப்பள்ளி வாசலிலும், கொட்டாரத்திலும்....,
மண்டபங்களிலும், .....கோபுர வாசலிலும் ..... மற்றும் இராமாநுசர் அதிகம் தன் கவனத்தை செலுத்திய இடங்கள்  என்ற   பல இடங்களிலும்... நமது  மனத்தைச் செலுத்தி, ஆழ்ந்து அநுபவித்து..உருக வேண்டும்! கண்ணீர் விட வேண்டும்!

ஒவ்வொரு இடமும் அதிக மஹிமை பெற்றது நம் ராமாநுசன் திருக்கண் நோக்கால்!

அந்த அமுதனைக்கண்ட நம் ராமாநுசனின்  கண்களுக்கு .....
அமுதனே கண்கள்!

 சம்ப்ரதாய வளர்ச்சியையும், அரங்கமாநகரையும் தமது இரண்டு   கண்களாக பாவித்தவர் நம் ராமாநுசர்!
வேதாந்தியாக மட்டும் இருந்துவிடவில்லை!....மதபோதனை மட்டும் செய்துவிட்டுப் போகவில்லை!

திருமடைப்பள்ளிக்குச் சென்றால்,....தானே அந்த இடத்தை சுத்தம் செய்து, குப்பைகளை எல்லாம் அள்ளிப்போட்டு,ஸ்தல சுத்தி செய்து....மேலும்....
அங்கு......எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தினமும் பார்வையிடுவார்!
பெருமாள் தளிகை கண்டருள்வதால்,அந்த இடம் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்ற பாரிப்பு!
தினமும் நம்பெருமாளுக்கு மண்பாண்டத்தில்தான் தளிகை!
அதனால்....நித்யம் புதிதாக மண்பாண்டங்கள்!குயவரை தாமே நேரில்  பார்த்து அதற்கான ஏற்பாடுகளையும் தினமும் செய்வாராம்!! 

பெருமாள்....மோரார்குடமுருட்டியவன்.!!!!...
ஆய்ச்சி பாலைஉண்டவன்.!!!!
..வெண்ணெய்  உண்ட வாயன்!!!என்பதால்.......போக்யமாய்இருக்கவேண்டுமே என்று அந்தந்த வேளையில் புதிதாக....,"பால்,தயிர் வெண்ணெய் " கொண்டுவரவேண்டும் என்று கோபாலர்களிடம் சொல்வாராம்!

அந்தந்த கைங்கர்யங்களில்  ஈடுபடுபவர்களுக்கு..... அவர்களுக்குத் தகுந்த பொற்காசுகளை உடனடியாக கொடுத்துவிடவேண்டும் என்று அதற்காக நியமித்து இருக்கும் கோயில் கணக்கரிடம் சொல்வாராம்!

நமக்கு எப்பேற்பட்ட பேறு கிடைத்து இருக்கிறது!

 நாம் எல்லோரும்  இராமாநுச அடியார்கள்!.

இன்றும் ....நாம்...."அடியேன் இராமாநுச தாஸன்"... என்று மார்தட்டி சொல்லிக்கொள்கிறோம்!
யாருக்கும் கிடைக்காதது!
எம்பெருமானார் தரிசனம்! ....சொல்லும்போதே கண்ணீர் விடவேண்டும்!!

ராஜகுலத்துக்கு.....
 "முடியும் மாலையும் போலே..."..அடிசூடும் அரசைஉடைய ப்ரபந்நனுக்கு  த்வயமே "முடியும் மாலையுமாய்"... அமைந்துள்ளது!....
என்று எம்பெருமானார் அடிக்கடி ஸாதிப்பதாக... வார்த்தாமாலையில் வருகிறது!( 136)

 நமக்கு...மிகமுக்யமானது! ....
“ ஸுதர்சன பட்டர் ...”சரணாகதி கத்யத்தில் வ்யாக்யானம் செய்கிறார்!
“ ஸ்வ ஸம்பந்தி ஸம்பந்திநிஸ்தரணம்பி ஸர்வ ஶப்தாபி.....”என்று ...
யாருக்கெல்லாம் ...
எம்பெருமானார் சம்பந்தம்  ப்ராப்யமானதோ அவர்களுக்கெல்லாம் பேறு உண்டு என்று பிராட்டி சொல்கிறாளாம்!
“;ஸர்வம் ஸம்பத்ஸ்யதே”...என்கிறாள்!

இதைவிட நம்போன்ற ஆசாபாசம் கொண்ட சம்சாரிகளுக்கு என்ன வேண்டும்??
ஒன்றும் செய்யாமல்,ஞான பக்தி வைராக்யம் இல்லாத அடியேனைப் போன்றவர்களுக்கும்  
ராமாநுச  சம்பந்தத்தால் பேறு!

நம்  ராமாநுசனின்  கருனை வெள்ளத்தில் நனைந்து  இன்புறுவோம்!


"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment